Coolie vs Leo: பாக்ஸ் ஆபிஸ் போட்டி - கூலியால் விஜய்யின் சிம்மாசனத்தை அசைக்க முடியாதா? கிளம்பிய பூகம்பம்
சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கூலி' திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்துடன் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களின் வசூல் சாதனைகள் குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.

கூலி திரைப்படம்
ரஜினியுடன் நாகார்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸானது. 'கூலி' படம் ரிலீஸான முதல் நாளிலேயே ₹150 கோடிக்கும் மேலாக வசூலை பெற்று பெரும் சாதனை படைத்தது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் ₹193 கோடியை எட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக உலகளவில் 'கூலி' படம் ₹300 கோடியை எட்டியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 'கூலி' படத்திற்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷன் ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'வார் 2' படமும் ரிலீஸானது. ஆனால் அந்தப் படம் 'கூலி'யை முந்த முடியவில்லை.
லியோ திரைப்படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இந்தப் படத்தில் நடித்திருந்தார். விஜய், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படமும் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸானது. 'லியோ' படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 'கூலி' படம் முந்திவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
கேரளாவில் வெற்றி
ஆனால் தற்போது விஜய்யின் சிம்மாசன கோட்டையாக கருதப்படும் கேரளாவில் அதாவது கேரள ரசிகர்கள் 'உலகளவில் அதிவேகமாக 400 கோடியை எட்டிய கோலிவுட் படம் லியோ' என 'லியோ' படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.
கூலி Vs லியோ
'கூலி' திரைப்படம் வசூலில் வேகமாக முன்னேறினாலும் 'லியோ' படத்தைப் போல ₹400 கோடிகளை விரைவாக எட்ட முடியுமா? என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் எந்தப் படம் இறுதி வெற்றியைப் பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நான்காவது நாள் வசூல்
'கூலி' படம் வெளியாகி, நேற்றுடன், அதாவது, ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நான்கு நாட்களில், படத்தின் வசூல், உலக அளவில், கிட்டத்தட்ட, ₹400 கோடிகளை, வசூல் செய்துவிட்டது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே, சுமார் ₹200 கோடிகள் முதல், ₹220 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டதாக, கூறப்படுகிறது. சாக்நிக் வலைத்தளம் தெரிவித்துள்ள தோராயக் கணக்குப்படி இந்தியாவில், படம், ₹194.5 கோடிகள், வசூல் செய்துள்ளதாக, குறிப்பிட்டுள்ளது.
படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ வசூல் கணக்கை, அறிவிக்கவில்லை. எப்படியும் படம் முதல் நான்கு நாட்களில், ₹400 கோடிகளில் இருந்து, ₹410 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications