நீங்க பொய்யா இருக்கீங்கன்னு நினைச்சேன்...முகத்துக்கு நேராக பிரியங்காவை கலாய்த்து தள்ளிய ராஜு
சென்னை: முகத்துக்கு நேராக பிரியங்காவை வாரி எடுத்து இருக்கிறார் ராஜு.
ராஜு, பிரியங்கா கூட்டணியை பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர்.
அடடா என்டர்டைன்மென்ட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலர் ராஜூக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

கண்ணாடி டாஸ்க்
கண்ணாடி டாஸ்க்கில் போட்டியாளர்களின் உண்மையான கேரக்டரை வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று பிக் பாஸ் பக்காவா ப்ளான் போட்டு இருக்கு. அது படியே போட்டியாளர்களும் நடந்து கொண்டு வருகின்றனர். ஒரு சில நாட்களாக நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூடி இருக்கிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடிக்கடி சண்டை காட்சிகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளும் ஜாலியாக நடந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த எபிசோடு
டாஸ்க் என்றாலே அதில் தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் பிரியங்கா மற்றும் ராஜூ நேற்றைய எபிசோட்டில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டார்கள். இவர்களை நம்பி நேற்றைய எபிசோடு பார்த்த ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர். இருவருமே காமெடியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் போது ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நேற்று போட்டி போட்டு வெளிக்காட்டி இருக்கின்றனர்.

வேற லெவல் கூட்டணி காமெடி
டைமிங் காமெடி ஆக பிரியங்காவை பார்த்து ராஜூ தன்னுடைய மனதில் இருப்பதையெல்லாம் அப்படியே கொட்டி இருக்கிறார்கள். டாஸ்க் என்கிற பெயரில் இவர் பிரியங்காவின் கோபத்தை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இவர் பேசியதை பார்த்து யாருக்கும் கோபம் வரவில்லை. காமெடி ஆகத்தான் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிரியங்காவை ஆரம்பத்தில் பார்க்கும்போது இவர் பொய்யாக நடித்துக்கொண்டு இருக்கிறார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் என வெளிப்படையாக ராஜு கூறியிருக்கிறார்.

சிரிச்சி வயிறு வலிச்சு போச்சு
பிரியங்காவை அதிகமாக ஆங்கரிங் செய்து தான் பார்த்திருக்கிறேன் ஆனால் அது போல இந்த வீட்டிற்குள் நீங்கள் ஆரம்பத்தில் யாரிடம் பேசினாலும் சூப்பர் சிங்கரில் ஆங்கரிங் செய்வது போலவேதான் இருந்தது. ஆனால் பழகி பார்த்த பிறகுதான் பிரியங்கா ஒரு காமெடி பீசு என்பதை புரிந்து கொண்டேன் என்று வஞ்சனையில்லாமல் பிரியங்காவை கலாய்த்து தள்ளியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சை கேட்டு பிரியங்கா மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் வயிறு வலிக்க சிரித்து வருக்கின்றனர். அதுவும் அக்ஷரா சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்குச் சிரித்திருக்கிறார். அதுபோல போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இந்த எபிசோடை நன்றாக என்ஜாய் செய்திருக்கின்றனர் என்று கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications