நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ரச்சிதா வெளியேறுகிறாரா???காரணம் இதுதானா!!
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ரச்சிதா வெளியிடுவது ரசிகர்களின் மத்தியில் கவலையை கொடுத்திருக்கிறதாம்.
தொடர்ந்து இந்த சீரியலில் நடிகர்கள் வெளியேறுவது சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
டி ஆர் பியில் முன்னணியில் இருக்கும் சீரியலில் இப்படி ஒரு அதிரடி மாற்றமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சோகமான செய்தி
விஜய் டிவியின் பிரபலமான சீரியலில் ஒன்றான.. நாம் இருவர் நமக்கு இருவர்.' சீரியலிலிருந்து மகா டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரச்சிதா விலகுவதாக வெளிவந்துள்ள செய்திகள் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.2011ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ..பிரிவோம் சந்திப்போம்..' சீரியலில் ஜோதி கதாபாத்திரத்தில் அறிமுகமான ரச்சிதா.. அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த தினேஷையே நிஜத்திலும் ஜோடி ஆக்கிக்கொண்டார்.

கருப்பு ஜோதி
அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற சீரியலில் மகா என்ற கேரக்டரில் டஸ்கி பெண்ணாக நடித்திருந்தார் .ஆரம்பத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடித்திருந்தாலும்...ரச்சிதாவிற்கான ரசிகர்களை உருவாக்கியது சரவணன் மீனாட்சி2 தொடர் தான். விஜய் டிவியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் இரண்டாவது பாகத்தில் மீனாட்சியாக என்ட்ரி ஆனார் ரச்சிதா. அவர் அதற்கு முன்பு நடித்திருந்த சீரியல்களின் கேரக்டர்கள் அனைத்தையும் மறக்கடிக்கும் அளவிற்கு செம்ம ஹோம்லி லுக்கில் மாறியிருந்தார்.

மீனாட்சிக்கு அதிகரித்த ரசிகர்கள்
இவரது உண்மையான பெயரான ரச்சிதாவை மறந்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரை மீனாட்சி என்று சொல்லும் அளவிற்கு மீனாட்சி கேரக்டரில் பக்காவாக கலக்கியிருந்தார். நேர்த்தியாக சேலையை கட்டி எடுத்து வாரிய ஹேர் ஸ்டைலுடன் இவர் வருவதை பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருந்தார். தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் தமிழ் மக்களை கவர்ந்த ரச்சிதா இதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். அந்த சீரியல்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார்.இவர் பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும் தற்பொழுது தமிழில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 மற்றும் அம்மன் சீரியலில் நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

திடீர் முடிவு
நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து இவர் விலகுவதாக அறிவித்துள்ளது தான் தற்போது இவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் பிறந்த ரச்சிதா கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். தற்பொழுது கன்னட சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வரும் ரச்சிதா..அதற்காகத்தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என கூறப்பட்டாலும்.., கொஞ்ச நாட்களாகவே நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகளே பெருவாரியாக வருவதாலும்.. தனக்கான ஸ்கோப் அதில் இல்லை என்று ரச்சிதா கருதியதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்று ஒரு வதந்தியும் பரவிவருகிறது.எப்படி இருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக ரச்சிதாவை மிகவும் மிஸ் பண்ணுவதாக கதறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications