சுத்திவிட்டு ஒரு சூப்பர் ரொமான்ஸ்.. ரேஷ்மாவுக்கு செவந்து போச்சே!
சென்னை : பாவாடை தாவணியில் உள்ள ரேஷ்மாவை அவர் சுற்ற.. அவர் போய் இவர் கைகளுக்குள் விழ.. பார்க்கும்போதே பார்ப்பவர்களுக்கும் வெட்கத்தை தூண்டி விட்டது இந்த காட்சி.
ரசிகர்களை பீல் பண்ண வைத்திருக்கும் சூப்பர் ஜோடி மீண்டும் சூப்பராக சேர்ந்தாச்சு... அபி டெய்லர்தான் இப்போது கலர்ஸ் டிவி ரசிகர்களின் ஹாட் டாப்பிக்.
ரியல் லைப் ஜோடி இனி ரீல் லைஃப்லையம் ஒன்றாக சேர்ந்ததுள்ளனர். இதனால் ரசிகர்களுக்கும் செம்ம ஹாப்பி தான்.

டான்ஸர் ரேஷ்மா
ரேஷ்மா கதாநாயகி ஆவதற்கு முன்பு டான்ஸ் தான் முக்கியம் என ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்து ரசிகர்களின் மனதில் தன்னுடைய அழகான டான்ஸினால் தனக்குன்னு ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவர் இதற்கு முன்பு ஒரு மாடலாக இருந்தாலும் , கருப்பு அழகியாக இந்த நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்து இருக்கிறார்.

பூர்வீகம் கேரளா
கருப்பாக இருப்பதும் எந்த குறையும் இல்லை என பலருக்கும் முன்மாதிரியாக தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இவருடைய டான்ஸ் பார்த்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரியது ஆனது. ரேஷ்மா கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்து சென்னையிலேயே மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தார் .

மிஸ் சென்னை ரன்னர் அப்
2016ஆம் ஆண்டில் மிஸ் மெட்ராஸ் ஆக இரண்டாவது ரன்னர் அப் ஆனார்.ஆனால் அதற்குப் பிறகுதான் இவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை கிடைத்திருக்கிறது . ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் .ஆனால் அதே சேனலில் தனக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கும் என்று இவர் எதிர்பார்க்கவில்லை .

எதிர்பாராத வாய்ப்பு
எதிர்பார்க்காத நேரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து தன்னுடைய திறமையை நன்றாக நிரூபித்து வருகிறார். இவரை பார்த்து பல பெண்களும் அழகில் முன்மாதிரியாக எடுத்து வருகின்றனர். பலர் கருப்பாக இருப்பதால் கண்ட கிரீமையும் போட்டு கலர் ஆகிவிட மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்கும் போது இவர் எனக்கு அப்படியெல்லாம் இல்லை என்கிறார்.

பூவே பூச்சூடவா சீரியல்
அது போலவெல்லாம் ஆக வேண்டும் என்று கொஞ்சம் கூட ஆசை இல்லை என்னுடைய நிறத்தை நான் ரொம்பவம் நேசிக்கிறேன். அதனால் நான் நானாக இருக்கவே விரும்புகிறேன் என கூறியிருக்கிறார்.
ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகன்கள் மாறினாலும் கதாநாயகி இவர் ஒருவர் மட்டும்தான். இவருக்காக பல ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனராம்.

அபி டெய்லர் சீரியல்
சீரியலின் இவருடைய துருதுரு கேரக்டரையும் பொறுமையையும் பலருக்கும் பிடித்துப் போய்விட்டது .அது மட்டுமல்லாமல் தற்போது இவர் அபி டெய்லர் என்னும் மற்றுமொரு சீரியலிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை சீரியலில் கதாநாயகியாக பார்த்த ரசிகர்கள் தற்போது அவருடன் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் மதனுக்கும் இவருக்கும் திருமணம் என்பதை கேள்விப்பட்டதும் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

காதலர் மதன்
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக இருக்கும் நிலையில் மீண்டும் அபி டெய்லர் சீரியலிலும் ஒன்றாக நடிக்கிறார்கள். இந்த சீரியலில் இவர்கள்தான் ஜோடி என்பதைக் கேள்விப்பட்டதும் இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பூவே பூச்சூடவா சீரியலிலும் இவர் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து முன்னேறி வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார் .

மதனுக்கு செம ரோல்
அதேபோல தற்போது அபி டெய்லர் சீரியலிலும் இவர் ஒரு டெய்லர் ஆகவும் மதன் ஒரு ஜவுளி நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். மீண்டும் இவருடைய நடிப்பை ரசிக்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஆனால் விரைவில் ஒளிபரப்பப்படும் இந்த சீரியலுக்கு பிரமோவை டிவியிலிருந்து ஒளிபரப்பி விட்டனர் . அதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மூச்சு விடாமல் பேசும் மதன்
அபி டெய்லர் சீரியலுக்காக டைட்டில் ப்ரோமோ வில் இவர் மூச்சுவிடாமல் பேசும் டயலாக்கை பார்த்து நெட்டிசன்கள் காலாய்த்தாலும் ரசிகர்கள் உச்சு கொட்டி ரசித்து எப்போ சீரியலை ஒளிபரப்ப போகிறார்கள் என கேட்டு வருகின்றனர். தற்போது அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மாவும் மதனும் ஜோடியாக நடித்திருந்தாலும் திரைக்குப்பின்னால் இவர்கள் செய்யும் லூட்டிகளை ஒரு வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பதிவிட்டிருக்கிறார்.

சூப்பர் டான்ஸ்
அதில் கோட் சூட்டோடு மதனும், பாவாடை தாவணியில் ரேஷ்மாவும் செம ரொமான்ஸ் டான்ஸ் போட்டிருக்கின்றனர் .இவர்களுடைய டான்ஸை பார்த்ததும் ரசிகர்கள் ஹாட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது.. மேட் பார் ஈச் அதர் என்று சொல்வார்கள். அதையே தமிழில் ஜாடிக்கேத்த மூடி என்று சொல்வார்கள். அது இவர்களுக்குத்தான் கரெக்டாக பொருந்துகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications