அசால்ட்டான நடிப்புக்கு சொந்தக்காரரான ரித்திகா சிங் பிறந்தநாள்...வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: நடிப்பு என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி என்று தத்துவத்தை வெளிக்காட்டும் ரித்திகா சிங்கின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசத்தை காட்டி வரும் இவருக்கு திறமைகள் அதிகம் தான்.
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஹாட்டின் களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

இறுதி சுற்றில் ஆரம்பம்
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும் ரித்திகா குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி குடும்ப குத்துவிளக்காக என்னால் கலக்க முடியும் என்று நிரூபித்து வருகிறார். இறுதிசுற்று திரைப்படத்தில் நடிக்க சொன்னால் கேரக்டராகவே மாறி அனைவரின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். நடிப்பு என்று வந்துவிட்டால் எனக்கு எல்லாமே கைவந்த கலைதான் என்று நடிப்பு மட்டுமல்லாமல், ஆட்டத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நடிப்புக்கு அங்கீகாரம்
மூன்று மொழிகளில் ஒளிபரப்பான இறுதிசுற்று திரைப்படத்தில் மூன்று மொழிகளிலும் இவரே கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவே இவருடைய நடிப்புக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் தான். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படங்களுக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். முதல் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக கலக்கியவர். அதற்குப்பிறகு பவ்யமான பெண்ணாகவும் நடித்திருக்கிறார். இவர் என்ன செய்தாலும் ரசிக்கும் ரசிகர்கள் இவருடைய சுருள் முடியை அதிகமாக ரசித்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த நூடுல்ஸ் தலைமுடி
அசோக் செல்வன் மற்றும் வாணி போஜன் உடன் இவர் ஓ காதல் கண்மணியே என்னும் திரைப்படத்தில் தன்னுடைய ஆழமான காதலை அழகான கண்களாலே காட்டி அனைவரையும் அசர வைத்துவிட்டார். இந்த திரைப்படத்தில் இவரை கதாநாயகன் நூடுல்ஸ் மண்டை என்று அழைத்து வருவதைப் பார்த்து பல ரசிகர்கள் இவரை நூடுல்ஸ் என்று செல்லமாக அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். முதல் திரைப்படத்தில் ரித்திகாவுக்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் வந்ததைத் தொடர்ந்து அவருக்காக பல ரசிகர்கள் மன்றங்களை தொடங்கி விட்டனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ரித்திகா சிங் பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்கள் பல ஹாஷ்டேக்களை ட்ரண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இனி பிறக்கும் வருடம் இவருடைய வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் என்றும் பல நல்ல செய்திகள் இவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் பல்வேறு வாழ்த்துக்களை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். பிறந்தநாள் அதுவுமாக ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் ரித்திகா வின் பிறந்தநாள் போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications