"திடீர்னு கட்டிப்பிடித்து" கண் கலங்கிய நபர்..இனி இப்படி பண்ணாதீங்க..ரோபோ சங்கர் மனைவி வேண்டுகோள்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா சங்கர் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.
முதல்முறையாக ரோபோ சங்கர் எதனால் உடல் எடை குறைந்தார் என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதோடு தான் வெளியே செல்லும்போது தனக்கு நடந்த நிகழ்வு ஒன்று பற்றியும் இனி யாரும் அந்த மாதிரி செய்யாதீங்க என்று பிரியங்கா வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
நடிகர் ரோபோ சங்கர் விஜய் டிவியில் கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய கடினமான முயற்சியால் பிரபலமடைந்து இருந்தார். ஆனால் இப்போது அவர் உடல் எடை குறைந்த நிலையில் இருந்து சில மாதங்களாக சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் வைரலாகி கொண்டிருக்கிறார்.

ரோபோ சங்கர் என்ன செய்தாலும் அது பற்றி சமூக வலைதளத்தில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ரோபோ சங்கர் வளர்த்த கிளிக்கு அவர் பைன் கட்டியதில் தொடங்கி, அடுத்ததாக அவர் உடல் எடை குறைந்தது, அதை தொடர்ந்து இப்போது அவருடைய மகள் திருமணம் என அடுத்தடுத்து ரோபோ சங்கர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முதல் முறையாக ரோபோ சங்கர் உடல் எடை எதனால் குறைந்தார்? அப்போ அப்போ என்ன எல்லாம் நடந்தது என்பது பற்றி ரோபோ சங்கரும் அவருடைய மனைவியும் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கின்றனர். அதில் பேசிக் கொண்டிருக்கும்போது ரோபோ சங்கர் மனைவி, சில தினங்களுக்கு முன்பு நாங்க ஒரு கல்யாண வீட்டு பங்க்ஷன்க்கு போயிருந்தோம்.
அப்போ ஒரு பொண்ணு ஓடி வந்து என்னை கட்டிப்பிடிச்சு, அங்கிள்லை(ரோபோ சங்கரை) ரொம்ப கெட்டதா சொல்லுங்க. ஆரம்பத்துல என்னோட அப்பாவுக்கும் அங்கிள் மாதிரி தான் பிரச்சனை இருந்துச்சு. பிறகு நாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தோம். அவர் உயிர் பொழைக்கல, இறந்துட்டாரு. எனக்கு அங்கிள பிடிக்கும் அதனால அவரை ரொம்ப நல்லா பத்திரமா பாத்துக்கோங்க என்று கண் கலங்க அந்த பொண்ணு பேசுச்சு.
அந்த பொண்ணு பேசும் போது அந்த கண்ணுல அவ்வளவு பாசம் தெரிஞ்சுச்சு. நான் அப்போ சொன்னேன்,எதுக்கு அங்கிள் என்று சொல்ற, உனக்கு அவர பாக்கும்போது அப்பா மாதிரி தானே தோணுது என்கிறாய் அப்போ அப்பானு கூப்பிடு என்று சொன்னேன். இந்த மாதிரி பாசமா நிறைய பேரு இருக்காங்க. ஆனா ஒரு சிலர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது ரொம்பவே தவறா கருத்து வெளியிட்டு இருந்தாங்க.
நாங்க அந்த மாதிரி வர்ற கமெண்ட்களை எல்லாம் படிக்கிறது இல்ல. ஆனா நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க சிலர் இப்படி தவறா வரும் கமெண்ட்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நமக்கு அனுப்பி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க பாருங்கன்னு சொல்றாங்க. அப்போ கஷ்டமா இருக்கு இனி அப்படி யாருக்கும் தவறா யாரும் கமெண்ட் போடாதீங்க.

எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம வரும்..! எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. ஆனா நமக்கு பிடிக்கல என்கிறதுக்காக அடுத்தவங்க தரக்குறைவா பேசாதீங்க என்று உருக்கமாக வேண்டுதல் வைத்திருக்கிறார். அதோடு ரோபோ சங்கருக்கு உடல்நிலை சரியில்லன்னா போது அத பத்தி பெரிய விஷயமா தப்பு தப்பா பேசிகிட்டு இருக்கிற, நேரத்தில் இவருக்கு வந்த மாதிரி இப்படி ஒரு நோய் வந்துச்சுனா அதிலிருந்து மீள்றதுக்கு என்ன வழி என்பது பற்றி பேசுங்க.
மஞ்சகாமாலைக்கு என்னென்ன மருந்து எடுத்துக்கலாம் என்று உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவ குறிப்பு சொல்லுங்க. அது பலருக்கும் பயன்படும். ஆனால் அதை விட்டுட்டு பொய்யா வதந்தி பரப்பி அடுத்தவங்க மனசையும் கஷ்டப்படுத்தாதீங்க என்று அந்த பேட்டியில் பிரியங்கா சங்கர் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications