காந்தாரா ட்ரெய்லரால் சோசியல் மீடியாவை கலக்கும் ருக்மணி வசந்த்.. அப்போ கயாடு லோஹர் இப்போ இவர்தான் டாப்!
சென்னை: சினிமா உலகில் சில நடிகர்கள் திடீரென வந்து மக்களின் மனதைக் கவர்வார்கள். அப்படி, காந்தாரா படத்தின் மூலம் கன்னட சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ருக்மணி வசந்த். அழகான தோற்றத்தோடு திறமையான நடிகையாகவும் இவர் பார்க்கப்படுகிறார். தற்போது, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ருக்மணி, தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு புதிய தகவலைப் பகிர்ந்து, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கன்னட சினிமாவின் கனவுக்கன்னி
பெங்களூருவைச் சேர்ந்த ருக்மணி வசந்த்தின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அவருடைய அம்மா ஒரு பரதநாட்டியக் கலைஞர். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு, அப்படியே சினிமாவுக்குள் வந்துவிட்டார். 2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான திரைப்படம் தான் இவர் நடித்த முதல் திரைப்படம். அதைத் தொடர்ந்து சில கன்னடப் படங்களிலும் ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்திருந்தார்.
தமிழைப் பொறுத்தவரை, நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, இவரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படத்தில் இவரை நடிக்க வைத்தார். மதராஸி திரைப்படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
கனவுக்கன்னி ஆன ருக்மணி
காந்தாரா சாப்டர் ஒன் தான் ருக்மணி வசந்த்தின் அடுத்த படம். ஏற்கனவே, காந்தாரா திரைப்படம் 2022-ல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், தற்போது மிகவும் அதிகமான பட்ஜெட்டில் காந்தாரா சாப்டர் ஒன் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் 2 படத்தைத் தொடர்ந்து கன்னடத்திலிருந்து 1000 கோடி வசூலை பெறும் அடுத்த படமாக கந்தாரா சாப்டர் ஒன் இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பெங்களூருவில் நடந்தபோது, அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியோடு ருக்மணி வசந்த்தும் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று வெளியான கந்தாரா சாப்டர் ஒன் படத்தின் டிரெய்லர் வீடியோவில் ருக்மணி வசந்த்தின் தோற்றம் தொடர்பான புகைப்படங்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இவரை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இதனால் கூகுளிலேயே ருக்மணி வசந்த் என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
டிராகன் படம் வெளியாவதற்கு முன்பு கயாடு லோஹரை இப்படித்தான் பலரும் ட்ரெண்டிங் செய்தார்கள். அதேபோல, தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக ருக்மணி வசந்த் மாறி இருக்கிறார். இவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து இன்னும் சில வருடங்கள் இவர் தமிழ் சினிமாவை ஆள்வார் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ள ருக்மணி வசந்த்தின் அடுத்தடுத்த படங்கள், தமிழ் சினிமாவில் அவருடைய இடத்தை உறுதியாக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications