கண்ணனுக்கு ஜோடி மாறிப்போச்சி.. என்ன இப்படி சொல்லிட்டீங்க
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்குப் பதில் இவர் என கண்ணன் ஜோடியை மாற்றி விட்டார்களே இதைப்பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு கதை ரொம்பவே இழுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கிடைத்திருக்கிறது
விஜே தீபிகா நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா கேரக்டரில் ஈரமான ரோஜாவே சீரியலின் கதாநாயகி இனி நடிக்கப் போகிறார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி இருக்கிறார்கள்.

இது புதுசு இல்லையே
பொதுவாக சீரியல்கள் என்றாலே பல வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்து கொண்டிருப்பதால் பலரால் தொடர்ந்து சீரியல்களில் ஒரே கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. ஒரே நேரத்தில் அவர்கள் வேறு சில சீரியல்களில் கமிட்டாகி இருந்தால் ஒரு சில சீரியல்களில் இருந்து விலகி விடுகிறார்கள். இந்த மாதிரி தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே தீபிகா விலகிவிட்டார். இவர் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் தற்போது செமையாக பர்பாமன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து கதை சூடு பிடித்திருக்கும் நேரத்தில் இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கலவரப்படுத்திய காதல் கல்யாணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரொம்பவே பிரபலமானது. இது ஒரு கூட்டு குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு இருந்தாலும் இதற்கு என்று ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகத்தான் இருக்கின்றனர். அதுவும் இந்த வீட்டில் 4 ஆண்களும் அவர்களுடைய மனைவிகளையும் சுற்றியே இந்த கதை வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் கடைக்குட்டி தம்பியான கண்ணன் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதே ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் வீட்டில் இவரை சேர்க்காமல் வெளியே துரத்தி விட்டனர். அனைவரும் கண்ணனை நினைத்து தான் பீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கண்ணன் வேலையில் சேர்ந்து இருப்பதை பார்த்து அண்ணன்கள் உருகுவதும் அண்ணனிடமும், அண்ணிகளிடமும் பேச முடியாமல் கண்ணன் உருகுவதும் கதையில் ஒரே பாசமழை ஆகத்தான் இருக்கிறது.

இப்போதான் புடிச்சிருக்கு
கண்ணன் ஐஸ்வர்யா திருமணத்தை பார்த்த பல சீரியல் ரசிகர்கள் ஏதோ அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் இந்த மாதிரி கல்யாணம் செய்து விட்டால் என்ன மாதிரி கோபப்படுவார்களோ அந்த மாதிரி தான் இவர்கள் மீது கோபப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதுவும் பலர் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இல்லை. கண்ணனுக்கு ஐஸ்வர்யா அக்கா மாதிரி இருக்கிறார் என்று கூறி வந்த நிலையில் இவர்கள் இருவரும் சூட்டிங்கில் மட்டுமல்லாமல் சூட்டிங் இல்லாமல் ஃப்ரீயாக இருக்கும் நேரங்களிலும் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து தற்போது ரசிகர்களிடம் நன்றாக பிரபலம் ஆகி விட்டனர். இவர்களின் ஜோடியை முதலில் ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் கூட தற்போது ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

ஐஸ்வர்யா மாறியாச்சு
தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விஜே தீபிகா விலகி விட்டு அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சாய் காயத்ரி இனி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே சாய் காயத்திரிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்தால் இவருக்கு செட்டாகாது என்று ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கண்ணனுக்கு அக்கா மாதிரியே இருப்பார் என்று கூறிவருகிறார்கள். பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் சாய் காயத்ரி ஐஸ்வர்யா வாக ஜொலிக்கிறாரா? இல்லையா? என்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications