குளிரால் குனிந்த சாக்ஷி...குளிர்ந்து போன ரசிகர்கள்
சென்னை : குளுகுளுவென குளிரில் நடுங்கினாலும், அழகை காற்று வாங்க விட்டிருக்கும் சாக்ஷி அகர்வாலை பார்த்ததும் ரசிகர்கள் வேர்த்து விறுவிறுத்து போயிருக்கிறார்கள்.
கையை தூக்கி கன்னாபின்னாவென்று அழகை காட்டி இருக்கும் சாக்ஷியைப் பார்த்த ரசிகர்களால் இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பட்டன்கள் தெறித்து ஓடுகிறது.
மலை அழகா? மலைக்கவைக்கும் சாக்ஷி அழகா என்று இன்ஸ்டாகிராமில் பட்டிமன்றம் தொடங்கிவிட்டது.

ரசிகர்களின் எனர்ஜி கூடுகிறது
ஓவர் குளிரில்.. ஓவர்கோட்.. போட்டுக்கொண்டு, மலைத் தோட்டங்களை ரவுண்டு வந்த ஷாக்ஸி போட்டோக்களை அவரது ரசிகர்கள் மலைக்க!! மலைக்க!! பார்த்து.. ரசித்து...டிரென்ட் செய்து வருகின்றனர்.லேட்டஸ்டாக ஜிப்லைனில் ஒரு ரவுண்டு போய் வந்து வீடியோ பதிவேற்றிய ஷாக்ஸி, அந்த வீடியோவில் தனக்கே உரித்தான ஹாட் ஸ்டைல் மிஸ் ஆகிறதே என்று நினைத்திருப்பார் போல,உடனே அப்படியே..அங்கேயே.. வழக்கம்போல கொஞ்சம் 'கிக்'கோட சில போட்டோக்களை எடுத்து அப்லோட் செய்து விட்டார். ஷாக்ஸியின் ஜிப்ளின் வீடியோவை பார்த்து எதிர்பார்த்தது ஒன்றுமில்லையே.... என்று வருந்திய ரசிகர்களுக்கு, கவலைப்படாதீர்கள்... அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன் என்று சொல்வது போல், இந்த போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களின் ஏமாற்றத்தை ஈடுகட்டியிருக்கிறார்.

மலைக்கும் சூடு வந்திருக்குமோ
ஷாக்ஸிக்கு மலைகளில் குளிர்வது போல் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி அந்த மலையே கொஞ்சம் சூ...டாக தான் ஆகியிருக்கும், அவ்வளவு ஜில் கிளைமேட்டில் கூட காற்று வாங்குவது போன்று இரு கைகளையும் தூக்கிக்கொண்டு அவர் கொடுத்திருக்கும் ஆக்ஸனுக்கு நெட்டிசன்களிடம் சிறப்பான ரியாக்ஷன் இருக்கிறது, இன்ச் பை இன்ச்சாக ஷாக்ஸியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.தான் கொடுத்திருக்கும் போஸ்கள் எல்லாம் பார்த்து அந்த மலைச் செடிகளே கொஞ்சம் சூடாகி இருக்கும் என்று நினைத்திருப்பார் போல, அவைகளை கொஞ்சம் 'கூலா' இருங்க என்று தடவிக் கொடுத்த மாதிரி ஒரு ஸ்டில்லையும் போஸ்ட் செய்துள்ளார்.

பிக் பாஸுக்கு பிறகு பேமஸ் தான்
பிக்பாஸிற்கு முன்பு இவர், சூப்பர் ஸ்டாரின் 'காலா'.., தல அஜித்தின் 'விசுவாஸ்ஸம்' என்று தமிழின் உச்சபட்ச நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பின்புதான் அந்தப் படங்களில் நடித்திருப்பது இவர் தானா!! என்று தமிழ் ரசிகர்கள் அடையாளம் காண முடிந்தது. அந்த அளவிற்கு பிக் பாஸ் தான் இவரை ஃபேமஸ் ஆக்கிவிட்டது.பெரும்பாலும் பிக்பாஸ் வீட்டில் ஷாட்ஸ் போட்டு கொண்டே அலைந்ததாலே இவர் கொஞ்சம் தனித்து அறியப்பட்டார். ஸ்ட்ரக்சர்யை மெயின்டன் பண்ணுவதில் தனிக்கவனம் செலுத்தி வரும் ஷாக்ஸி, அந்த ஸ்ட்ரக்சர்க்கு ஏற்றார்போல் டைட்டான உடை அணிவதையே மிகவும் விரும்புவார்.

வசீகரிக்கும் அழகு
'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது போல் பிக்பாஸ் மூலம் தனக்கு கிடைத்த புகழை வைத்து வரிசையாக படங்களில் கமிட்டாகி விட்டார். அத்தோடு நில்லாமல் மாடலிங்கிலும் நன்றாக கல்லா கட்டி வருகிறார். இந்த வருடம் 'அரண்மனை 3' இவர் நடிப்பில் வெளி வரக் காத்திருக்கிறது,இதைத் தவிர ஆதிக் ரவிச்சந்திரனின் 'பகிரா', சின்ட்ரெல்லா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மற்றும் இயக்குனர் எழிலின் 'ஆயிரம் ஜென்மங்கள்' போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.ஆனால் எவ்வளவு படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் போன்றே இன்ஸ்டாகிராம் தான் இவரின் அடையாளம் ஆகி விடும் போல..அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை தன் போட்டோ மூலம் மெஸ்மரிசம் செய்து வைத்திருக்கிறார்
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications