விஜயின் பெயரை பயன்படுத்துகிறேனா, ரசிகரின் கேள்விக்கு சஞ்சீவ் பதில்...பீல் பண்ண வைச்சிட்டாரே
சென்னை: தன்னுடைய வளர்ச்சிக்கு விஜய்யின் பெயரை சஞ்சீவ் பயன்படுத்துகிறார் என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு தற்போது முதல்முறையாக பதிலளித்துள்ளார்.
சஞ்சீவ் மற்றும் விஜய் இருவரும் நண்பர்களாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் தங்களுக்குள் ஒரு பிணைப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

பிக்பாஸில் அறிமுகம்
தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகராகவும், வெள்ளித்திரை நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமான சஞ்சீவ் தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஒரு போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் இவருடைய பெர்பாமன்ஸ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இவர் 50 நாட்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஏற்கனவே சின்னத்திரையில் கதாநாயகனாக இவரை பலருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் சரவெடி சஞ்சீவ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.

கிறிஸ்மஸ் பிரியாணி டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும்போது இவர் அதிகமாக விஜய் பெயரை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்க பார்ப்பார் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். அதற்கு தற்போது அவர் பதிலளித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் நான் விஜய் பெயரை பயன்படுத்தியது கிடையாது. என்னுடைய ஒரு நண்பன் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதுகூட பிரியாணி செய்யும் டாஸ்க்கில் கிறிஸ்துமஸ் நேரத்தில் யாருக்கு இதை கொடுக்க நினைக்கிறீரகள் என்று கேட்டிருந்தனர். அதில் என்னுடைய நண்பர்களான விஜய் முதல் அனைத்து நண்பர்களின் பெயரையும் கூறி இருந்தேன். விஜய் மட்டும் அல்லாமல் நாங்கள் ஆறு பேர் பெஸ்ட் பிரண்ட் அனைவரையும் தான் நான் கூறி இருந்தேன் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்
விஜய் பெற்றிருக்கும் வெற்றி அவருடைய தனிப்பட்ட முயற்சி. அந்த முயற்சியில் இருந்து நான் கிள்ளி எடுத்து தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் ஐடியா என்றுமே எனக்கு இருந்ததில்லை. விஜய் ஒரு பெரிய பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், நான் அவருடைய நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் கேட்க முடியாத பல கேள்விகளை என்னிடம் கேட்டு விடுகிறார்கள். அவரிடம் எளிதாக பேச முடியவில்லை என்பதால் தன்னிடம் எளிமையாக பல கேள்விகளை கேட்டு விடுகிறார்கள். ஆனால் நானாக எந்த இடத்திலும் விஜய்யை பற்றி பேசியது கிடையாது என்று கூறியுள்ளார்.

சஞ்சீவின் தெளிவான பதில்
அதுமட்டுமல்லாமல் தான் மானாட மயிலாட நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும்போதுகூட அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் வந்தபோதும் நான் அவரை மேடையில், அவர்... என்றுதான் மரியாதையாக அழைத்தேன். அதற்கு விஜய் கூட எதற்கு இப்படி என்று கூறியிருந்தார். ஆனால் நான் நமக்குள் இருப்பது வேறு, ஆனால் மேடையில் வேறு என்று கூறியிருந்தேன். எந்த சூழ்நிலையிலும் என்னுடைய திறமையினால் தான் நான் நான் வளர்ந்து வருகிறேன் தவிர விஜயின் பெயரை பயன்படுத்தி இருந்தால், நான் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் அந்த மாதிரி செய்ய எனக்கு அவசியமில்லை என்று சஞ்சீவ் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications