தீபாவளி ரேஸில் "சீன்”.. அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த பட குழு! ராமாயணம், மூக்குத்தி அம்மன் 2 எவ்வளவு?
சென்னை: இந்த தீபாவளிக்கு தியேட்டரில் 3 படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சூர்யா நடித்த சீன், ரன்பீர் கபூர்- யஸ் கூட்டணியில் உருவான இராமாயணா, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 என 3 படங்களும் தீபாவளியை டார்கெட் செய்து வெளியானதால் தொடக்கத்தில் இருந்து வசூல் போட்டி அதிகமாக இருந்தது. இந்த நிலையில் சூர்யாவின் சீன் படத்திற்கு இப்போது 3 நாட்களில் எவ்வளவு வசூல் கிடைத்திருக்கிறது என்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சீன் 3 நாள் வசூல்
முதல் நாளில் ராமாயணம் இந்தியாவில் அதிக வசூல் பெற்றிருந்தாலும், மூன்றாவது நாளில் சீன் படம் 145 கோடி வசூல் பெற்றிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு இருக்கிறது. தீபாவளி விடுமுறையை கொண்டாட ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றிருப்பது படத்தின் வசூலுக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது. சீன் படத்தை பொருத்தவரையில் மலையாளத்தில் ரோமஞ்சம், ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.
முதல்முறையாக அவர் தமிழில் சூர்யாவை வைத்து படத்தை இயக்குகிறார் என்றதுமே ஆரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் இயல்பாக சூர்யாவை காட்டப் போகிறாரா? அல்லது மாஸ் கேரக்டரில் காட்டப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் நஸ்ரியா பல வருஷத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருவதும் இந்த படத்தின் பற்றிய பேச்சுக்கு காரணமாக இருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏற்கனவே இந்த வருஷத்தில் 2 ஹிட் படங்களை கொடுத்த சூர்யா இந்த படமும் ஹிட்டாக கொடுப்பாரா? அல்லது சொதப்பி விடுமா? என்றும் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இப்போ படம் வெளியான பிறகு சூப்பர் டூப்பர் வெற்றி என்று சொல்ற மாதிரி தான் வசூல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் முதல் நாளில் இருந்தே வசூல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2 vs ராமாயணா வசூல்
குடும்ப ஆடியன்ஸை கவர்கிற மாதிரி இந்த முறை இராமாயணா, மூக்குத்தி அம்மன் 2, சீன் என 3 படம் வந்திருந்தாலும் சீன் படத்திற்கு கொஞ்சம் மவுஸ் அதிகமாகவே இருக்கிறது. ராமாயணா படம் கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியான நிலையில், இந்த 4 நாட்களில் உலக அளவில் மொத்தம் 507 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மறுபக்கம் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 வசூலை பார்த்தால் ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், 2வது நாளில் 3வது நாளில் வசூல் அதிகரிக்க தொடங்கி 3 நாள் முடிவில் 10.35 கோடி ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
