Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பருத்தி கிளைமாக்ஸ்.. தங்க ஜரிகை புடவையில் பார்வதி.. அகிலா நிலைமையை யாருமே எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவி சேனலில் கடந்த 5 வருடங்களாக சீரியல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த செம்பருத்தி டிவி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. சீரியல் ரசிகர்கள் மட்டுமல்ல சீரியலில் நடித்த குடும்பத்தினரும் கண்ணீர் மல்க உணர்ச்சிப்பெருக்குடன் பிரியா விடை அளித்தனர்.

வீட்டிற்கு வேலைக்கு வந்த ஏழை பெண்ணை பணக்கார இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் கதை என்றாலும் பல்வேறு திருப்பங்கள், அகிலாண்டேஸ்வரியின் அட்டகாச நடிப்பும் ரசிகர்களால் விரும்பப்பட்டது. இந்த சீரியல் கிளைமேக்ஸ் பற்றியும் பார்வதி கட்டியிருந்த புடவை பற்றியும்தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஷபானா, விஜே அகினி, பிரியாராமன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. கடந்த 5 வருடங்ளில் 1400 எபிசோடுகளை கடந்துள்ளது செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிப்பரப்பான 'முத்த மந்தாரம்' சீரியலின் ரீமேக்காக உருவானது.

செம்பருத்தி

செம்பருத்தி

பணக்கார அகிலாண்டேஸ்வரி நடத்தும் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக பார்வதி கழுத்தில் தாலி கட்டுவார் ஆதி. அதன் பிறகு இருவருக்கும் காதல் மலரும். பார்வதி வேலைக்கார பெண் என்பதால் அகிலாண்டேஸ்வரிக்கு பயந்து ஆதியும் பார்வதியும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வார்கள்.

பார்வதி ஆதி திருமணம்

பார்வதி ஆதி திருமணம்

தாலியை மறைத்து கொண்டு அகிலா வீட்டில் வேலை செய்வார் பார்வதி. ஆதியாக மக்கள் மனதில் பதிந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியல் விட்டு விலகினார். அதன் பிறகு செம்பருத்தி சீரியலின் டி ஆர் பி ரேட்டிங் பயங்கரமாக அடி வாங்கியது. ட்ரெண்டிங்கில் இருந்த செம்பருத்தி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.

தினம் தினம் திருப்பங்கள்

தினம் தினம் திருப்பங்கள்

ஆதியாக சின்னத்திரையில் களமிறங்கிய தொகுப்பாளர் அக்னி தன் நடிப்பு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் செம்பருத்தி மீண்டும் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம் பிடித்தது. அதன் பிறகு பல டிவிஸ்டுகள், மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து மூன்றாவது முறையாக ஒரு சுபயோக சுப தினத்தில் ஆதி-பார்வதிக்கு அகிலாண்டேஸ்வரியே திருமணம் நடத்தி வைத்து நல்ல மாமியாராக மாறினார்.

பார்வதியை ஏற்றுக்கொண்ட அகிலா

பார்வதியை ஏற்றுக்கொண்ட அகிலா

அகிலாண்டேஸ்வரியும் ஆதி - பார்வதியை ஏற்றுக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. அது உண்மைதான் என்பது போல புரமோக்களும் கடந்த வாரம் ஒளிபரப்பானது.

செம்பருத்தி கிளைமேக்ஸ்

செம்பருத்தி கிளைமேக்ஸ்

செம்பருத்தி சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆதி- பார்வதி திருமண எபிசோடை மிகுந்த ஹைப் கொடுத்து இரண்டரை மணி நேர நிகழ்வாக ஒளிபரப்பினர். அந்த எபிசோட் சூப்பர் ஹிட் அடித்தது. பல லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சீரியல் கிளைமேக்ஸ் 4 மணி நேரம் ஒளிபரப்பானது. 16 திருப்பங்களுடன் ஒளிபரப்பானது கிளைமேக்ஸ்.

அகிலாண்டேஸ்வரிக்கு இப்படியா?

அகிலாண்டேஸ்வரிக்கு இப்படியா?

கடைசியில் அகிலாண்டேஸ்வரி, வில்லி வனஜா மற்றும் நந்தினி உயிரிழந்து விடுகின்றனர். சீரியலின் கிளைமாக்ஸ் எபிசோடில் பார்வதி, தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து ஜொலித்தார். இந்த புடவையின் மதிப்பு மட்டுமே 1 லட்சம் ரூபாய் என சீரியல் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

தங்க ஜரிகை பட்டுப்புடவை

தங்க ஜரிகை பட்டுப்புடவை

செம்பருத்தி கிளைமாக்ஸை ஜீ தமிழ் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பியது. அதன் ஒரு பகுதியாகவே பார்வதி தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட புடவை அணிந்து நடித்துள்ளதாக கூறப்பட்டது. ஐந்து ஆண்டுகள் ஒரே குடும்பமாக வாழ்ந்த சீரியல் நட்சத்திரங்களுக்கு பரிசளிக்கப்பட்டது. சீரியலில் நடித்த குடும்பத்தினர்கள் கண்கள் கலங்க உணர்ச்சிப்பெருக்குடன் விடை கொடுத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+