வாய்ப்பு இல்லாததால் பழைய நிலைக்கு மாறிய ஷபானா...ஆனாலும் வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானா தற்போது சீரியல் வாய்ப்பில்லாததால் மீண்டும் பழைய படி மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
எப்போது சின்னத்திரைக்கு மீண்டும் வருவீர்கள் என்று ரசிகர்கள் ஷபானாவிடம் கேள்விகளை தொடர்ந்து வருகிறார்கள்.
விரைவில் ஷபானா சீரியலில் நடிப்பார் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் ஷபானா தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களுக்கு விருந்தாக இருந்துள்ளதாம்.

இளைஞர்களை கவர்ந்த அழகி
பொதுவாக ஒரு சில நடிகைகள் தான் நடிக்கும் முதல் சீரியலில் வெற்றி பெற்று ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டி விடுகின்றனர். அந்த வகையில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷபானா. தான் நடித்த முதல் சீரியல் இந்த அளவிற்கு வெற்றியடையும் என்று ஷபானா கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு கிராமம் முதல் நகரம் வரை பட்டி தொட்டு எல்லாம் செம்பருத்தி ஷபானா அனைவருடைய மனதிலும் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் செம்பருத்தி சீரியலில் ஷபானாவை பார்ப்பதற்காக இளைஞர்கள் பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
செம்பருத்தி சீரியலின் கதாநாயகன் மாறியதும் சீரியலின் டிஆர்பி வெகுவாக குறைய தொடங்கியது. ஆனாலும் ஷபானாவுக்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். ஷபானா மற்றும் கார்த்திக் ராஜின் காமினேஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில் ஷபானா காதல் செய்யும் செய்தி சமூக வலைத்தளத்தில் பரவியதும் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் பின்பு வாழ்த்துக்களை கூறி வந்தனர். ஆரம்பத்தில் கார்த்தி மற்றும் ஷபானா இருவரும் காதலிக்கின்றார்கள் என்ற வதந்திகள் பரவி வந்தது. ஆனால், அதை மறுத்த ஷபானா பின்பு தான் உண்மையாக காதலிக்கும் நபரை அறிமுக செய்தார்.

வாய்ப்புகளை மறுத்த ஷபானா
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஆரியனை, ஷபானா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் பல வருடங்களாக ஷபானாவை செம்பருத்தி சீரியலில் பார்த்து ரசித்த ரசிகர்கள் தற்போது அந்த சீரியல் முடிவடைந்ததால் மீண்டும் ஷபானா எந்த சீரியலுக்கு வருவார் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். செம்பருத்தி சீரியலுக்காக பல திரைப்படங்களின் வாய்ப்புகளையும், சீரியலில் வாய்ப்புகளையும் ஷபானா வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

கலக்கும் ரீல்ஸ் வீடியோ
ஷபானா தற்போது சன் டிவி சீரியலில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது.ஆனால், தற்போது கைவசம் எந்த சீரியலும் இல்லாததால் மீண்டும் அவர் மாடலின் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விதவிதமாக ஆடை அணிந்து ஷபானா வெளியிட்ட வீடியோக்களும் போட்டோக்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் ஜொலிக்கும் உடையில் ஷபானா வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாம். அதில்"அவ கூட நூறு வருஷம் வாழ வேண்டும் என்று கூட இல்ல..ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்..." என்கிற டயலாக் வைத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .ஆனாலும் பல ரசிகர்கள் இவருக்கு சீரியல் இல்லாததால் இப்படி மாறிவிட்டாரா?? என்று ஏக்கத்தோடு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications