தெருவில் இறங்கி.. பாவாடையை அப்படி இப்படி ஆட்டி செம ஆட்டம்.. கலக்கும் ஷிவாங்கி!
சென்னை : நன்னாரே நன்னாரே என மழை இல்லாமலே ரசிகர்களின் கவிதை மழையில் நனைந்து ஆட்டம் போட்டுள்ளார் ஷிவாங்கி.
மாடர்ன் உடை போட்டாலும் அடுத்தவர்களின் கண்ணை உறுத்தாத வகையில் கலக்கும் ரசிகர்களின் செல்ல குட்டி தான் ஷிவாங்கி.
எப்படித்தான் இந்த பொண்ணு இப்படி இருக்கிறதோ என பார்ப்பவர்கள் பொறாமைப்பட வைக்கும் ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

எதைச் செய்தாலும் அழகு
ஒரு சிலருக்கு தான் என்ன செய்தாலும் அழகாக இருக்கும். அந்த மாதிரி தான் ஷிவாங்கி என்ன செஞ்சாலும் அழகாக இருக்கிறதே என அவருடைய ரசிகர்கள் உருகி வருகின்றனர். இவருக்குள் இத்தனை திறமையா என வியந்தாலும் இன்னும் இருக்கிறது என ஒவ்வொன்றாக கலக்கி வருகிறார். அதுவும், தான் ஒரு செலிபிரிட்டி என்பதையே மறந்து வெகுளியாக இருப்பது தான் இவருக்கு பிளஸ்.

உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமில்லை
இவரைப் பார்த்து பல நெட்டிசன்கள் உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இல்லை என கலாய்த்து வந்தாலும் கண்டுகொள்வதே இல்லை. அதுதான் என்னுடைய சிறப்பு என கலாய்த்தவர்களையே பீல் பண்ண வைத்திருக்கும் ஷிவாங்கி ரசிகர்களின் செல்ல குழந்தை தான். இவருடைய பேச்சை அரை மணி நேரம் கேட்டாலே போதும் இவரையா கலாய்த்தோம் என பீல் பண்ணி விடுவார்கள்.

ஆயிரம் கவலை இருந்தாலும்
தனக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அடுத்தவர்களை சிரிக்க வைப்பவர்கள் தான் பெரிய பாக்கியசாலிகள் .அதுபோல என்னதான் வாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலும் அடுத்தவர்களின் முன்பு கலகலவென இருப்பவர்கள் ஒரு தனி ரகம்தான் .அதற்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் கெத்து வேண்டும். அது ஷிவாங்கியிடம் அதிகமாகவே இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருக்கும் இவரை பார்த்ததுமே சோகமாக இருப்பவர்களுக்கும் புத்துணர்ச்சி ஊற்று போல ஊறிவிடும்.

முன்னேறுவது கஷ்டம்
வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சனைகளும் இல்லாதவர்களே இருக்க முடியாது .ஆனால் அதை நினைத்துக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது .கஷ்டமாக இருக்கும் நேரத்தில் கவலையை மறக்க வைக்கும் பாடல்களையும் ,காமெடிகளையும் தான் அனைவரும் விரும்புவர். அந்த மாதிரி பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி .அதுவும் அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியின் அட்ராசிட்டியை தான் பலரும் அடிக்கடி பார்த்து வருகின்றனர்.

அனைருக்கும் பிடிச்ச ஷிவாங்கி
நடிகைகள் பலருக்கும் பலவிதமான ரசிகர்கள் இருப்பார்கள் .ஒரு சிலருக்கு குழந்தைகள் ரசிகர்களாக இருப்பார்கள் . ஒரு சிலருக்கு இளைஞர்கள் கவர்ந்து இழுப்பார்கள். ஒரு சிலர் வயதானவர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருப்பார்கள். ஆனால் அனைத்து தரப்பினருக்கும் ஃபேவரைட் சிவாங்கி தான். இவருடைய குழந்தை தனத்தையும் க்யூட்டா செய்யும் சேட்டைகளையும் ரசிக்கும் ரசிகர்கள் எல்லா தரப்பிலும் இருந்து வருகின்றனர் . குழந்தைகளும் தங்களைப் போன்றே இவருடைய துறுதுறு கேரக்டரை பார்த்ததால் இவரை நன்றாக ரசித்து வருகின்றனர்.

பாடகராகி காமெடியனாக மாறியவர்
ஷிவாங்கி விஜய் டிவியில் அறிமுகமானது என்னவோ பாடகராக தான் .ஆனால் தனக்கு இருக்கும் காமெடி திறமையும் நன்றாக வெளிக்கொண்டு வந்து விட்டார் .நான் பாட்டு மட்டும் அல்ல டான்ஸும் நன்றாக ஆடுவேன் என தெருவில் இறங்கி ஆட்டம் போட்டு இருக்கிறார். இவருடைய ஆட்டத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் க்யூட்டாக இருக்கிறதே என கொஞ்சி வருகின்றனர்.

கோமாளி புகழ்
தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால் , இவருடைய சேட்டைகளை பார்க்காத ரசிகர்கள் மீண்டும் எப்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கி தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோவை பதிவிடவும், இவருக்கு பல ஆயிரங்களை தாண்டி கமெண்ட்டுகளை ரசிகர்கள் கொட்டி வருகின்றனர் .

எல்லாமே கொஞ்சல்ஸ்தான்
அதுவும் அனைத்துமே இவரை செல்லமாக கொஞ்சி கொஞ்சி தான் கமெண்டுகளை அனுப்பி இருக்கின்றனர். அதில் பலரும் அப்படியே ஹீரோயினி போலவே இருக்கீங்க என தான் அதிகமான கமெண்ட்கள் வந்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஷிவாங்கிக்காக ரசிகர்களே படமெடுக்க ஆரம்பித்து விடுவார்கள் போல.












Click it and Unblock the Notifications