சின்னத்திரை ஜோடிகளான ரேஷ்மா, மதனுக்கு வீடியோ காலில் திருமண வாழ்த்துக் கூறிய சிம்பு
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த சின்னத்திரை ஜோடிகளுக்கு சிம்பு வீடியோ காலில் வாழ்த்து கூறியது வைரலாக பரவி வருகிறது.
சின்னத்திரையில் ஜோடிகளாக நடித்து தற்போது ரியல் லைப்பில் ஜோடியாக சேர்ந்திருக்கும் ரேஷ்மா மற்றும் மதனுக்கு ரசிகர்களின் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சிம்புவின் வாழ்த்து எதிர்பார்க்காத ஒன்று என்று ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நன்றி கூறி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

தொடரும் சீரியல் நடிகர்களின் திருமணம்
தற்போதைய நவம்பர் மாதம் சின்னத்திரை நடிகைகளின் பலருடைய திருமணங்களை கொண்டாடி வருகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகிகளின் திடீர் திருமணங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் தங்களுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் அளித்து வருகின்றனர் அதில் பலருடைய மனதைக் கவர்ந்த ரேஷ்மா மற்றும் மதன் ஒருவர்.

திடீர் திருமணம்
ஜீ தமிழில் ஒரே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த மதன் மற்றும் ரேஷ்மா இவர்கள் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக கலர்ஸ் டிவியில் அபிடெய்லர் சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுடைய திருமணம் எப்போது என்று ஆர்வத்துடன் கேட்டுக்கண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திடீர் திருமணம் செய்தியைக் கூறி இருந்தனர்.

கொட்டும் மழையிலும் திருமணம்
சென்னையில் ஏற்பட்ட கன மழையிலும் இவருடைய திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருக்கும்போது திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு சில பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துக்களைப் பகிர்ந்து செல்பி போட்டோக்களை கிளிக் செய்து சமூகவலைதளத்தில் பரப்பி வந்தனர்.

நன்றி தெரிவித்த ரேஷ்மா
ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் திருமணம் முடிந்தபிறகும் சீரியல்களில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு சிம்புவால் வர முடியவில்லை என அவர்களுக்கு வீடியோ காலில் வாழ்த்து கூறி இருக்கிறார். அதை எதிர்பாராத ரேஷ்மா, சிம்புவுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை போஸ்ட் பண்ணி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். ரேஷ்மா மற்றும் மதனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிம்புவின் ரசிகர்களும் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications