நானே எப்போ சாவேன்னு தெரியாது! என்னோட சோல்மேட் இவங்கதான்! அவங்க அப்படி பேசுறதால! கெனிஷா ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த செய்தி தான் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கெனிஷாவுடன் ரவி மோகன் வந்ததை பார்த்ததும் கோபமான ரவி மோகன் மனைவி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பாடகி கெனிஷா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தன்னைப் பற்றி பரவி வரும் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

சில தினங்களாகவே சோசியல் மீடியா பக்கங்களில் ரவி மோகன் குடும்ப பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. தன்னுடைய ஜெயம் ரவி என்ற பெயரை கடந்த வருடத்தில் அதிரடியாக மாற்றியிருந்தார். அதேபோல அவருடைய குடும்ப பிரச்சனையும் வெளி உலகத்திற்கு தெரிய வந்திருந்தது. ரவி மோகன் தான் காதலித்து திருமணம் செய்த ஆர்த்தியை திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Jayam Ravi ravi mohan

விவாகரத்து

அதைத்தொடர்ந்து விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஆர்த்தி தான் விவாகரத்து வழங்கப்போவதில்லை தனக்கு ரவி மோகனுடன் சேர்ந்து வாழ விருப்பம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் காதலிப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது. அதற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவருமே மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

ரவி மோகன் புகைப்படம்

ஆனால் இப்போது ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒரே வண்ண உடையுடன் ரவி மோகன் வந்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் இவர்கள் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று எல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில் ரவி மோகன் இப்போதும் என்னுடைய கணவர் தான் என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா என்று ஒரு நீண்ட அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டு இருந்தார்.

கெனிஷா பேட்டி

இந்த நிலையில் கெனிஷா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் உலகத்தில் ஒருவருக்கு மொத்தம் 7 சோல்மேட் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அதை சிலர் கட்டுக்கதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சோல் மேட்டையாவது எல்லோரும் வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள். ஏழு சோல் மேட்டை பார்ப்பதற்குள் நம் முடி எல்லாம் நரைச்சு போய் நாம் வயதானவர்களாக மாறிவிடுவோம்.

இரண்டாவது சோல்மேட்

நானும் இத்தனை வருஷமாக என்னுடைய சோல்மேட்டை பார்க்க வேண்டும் என்று தான் காத்திருந்தேன். எனக்கு நேரம் சரியாக அமைந்தால் எல்லாமே கிடைக்கும். இப்போதைக்கு எனக்கு ரெண்டு சோல்மேட் கிடைச்சிருக்காங்க. அவர்களில் ஒருவர் பெண் அவங்களுக்கும் எனக்கும் சண்டையே வராது. நாங்க ரொம்ப வருஷமா க்ளோசா இருக்கோம் எங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் வேற லெவல்ல இருக்கும் அந்த உறவே ரொம்ப அருமையா இருக்கும்.

வாழ்க்கையை மாற்றியவர்

இரண்டாவது சோல்மேட் ரொம்பவும் வித்தியாசமானவர். நான் என்னுடைய வாழ்க்கையில் நாம தான் நிறைய படித்திருக்கிறோம், ரொம்ப சுதந்திரமா இருக்கோம் இதுதான் நாமனு நினைச்சுட்டு இருந்த சமயத்துல அதையெல்லாம் மாற்றினவரு அவர் தான். எல்லா சோல்மேட்டும் நம்முடைய வாழ்க்கையை மாற்றி போட வந்தவங்க தான். அவங்க நம்ம கண்ணை எப்படி திறக்கிறார்கள் என்று நமக்கே தெரியாது. எனக்கு பாதுகாப்பா, உறுதுணையா, மரியாதை கொடுப்பவராகவும் வெறுப்பு தன்மை இல்லாதவராகவும், கோபமே இல்லாத ஒருத்தர் தான் என்னுடைய சோல்மேட்.

விளக்கம்

எனக்கு குழந்தைத்தனம் இல்ல ஆனால் குழந்தையாக இருக்கிறது பிடிக்கும். நான் எப்போ இறந்து போவேன்னு எனக்கே தெரியாது. அதனால நான் யாருக்கும் கெடுதல் செய்யல, யாரும் எனக்கு கெடுதல் செய்ய வேண்டாம் இருக்கிற வரைக்கும் சந்தோஷமாக இருப்போம் சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி அதிகமான நெகட்டிவ் சுற்றி வருகிறது. அது என்னுடைய பிரச்சனை இல்ல. உங்க வாழ்க்கையில் நீங்க சந்தோஷமா இல்ல. நீங்க கோபத்தை வேற யார் மேலயாவது போடணும் அதுக்காகத்தான் என் மேல போடுறீங்க. இதுக்காக நான் வருத்தப்பட்டு கொண்டு இருக்க முடியாது என்று அந்த பேட்டியில் கெனிஷா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+