Saindhavi : நான் பிராமின் பொண்ணு.. ஆனால் என் மகளுக்காக இதை பண்ணுவேன்! வெளிப்படையாக பேசிய சைந்தவி
சென்னை: பாடகி சைந்தவி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது தன்னுடைய மகள் மீது தனக்கு இருக்கும் அன்பை பற்றி பெருமையாக பேசி இருந்தார். அதோடு தன்னுடைய மகளுக்கு எதெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் பிராமின் வீட்டு பொண்ணாக இருந்தாலும் தன்னுடைய மகளுக்காக தான் செய்யும் செயலை பற்றி பேசியிருக்கிறார்.
பாடகி சைந்தவி பாடிய பாடல்கள் பலருடைய மனதை வருடும் வகையில் இருக்கும். சோகம், காதல், சந்தோஷம் என எதுவாக இருந்தாலும் சரி அதை வெளிப்படுத்த சைந்தவி பாடிய பாடல்கள் மனதிற்கு நெருக்கத்தை கொடுக்கும். அதிலும் சைந்தவி பாடிய பிறை தேடும் இரவிலே, விழிகளில் ஒரு வானவில், கையிலே ஆகாசம் போன்ற பாடல்கள் எல்லாம் எவர்கிரீன் பாடல்கள் தான்.

சைந்தவி பாடிய இந்த பாடல்கள் பலருடைய செல்போனில் ரிங்டோனாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சைந்தவி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிரபலம் அடைந்த ஜிவி பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ஆத்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் கடந்த வருடம் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தனர். அது பெரிய அளவில் பேசப்பட்டது.
தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷுக்கு, முன்னாள் மனைவி சைந்தவியின் உருக்கமான வாழ்த்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஆனாலும் தங்கள் முடிவில் இருவரும் உறுதியாக இருந்து இப்போது விவாகரத்து ஆகி இருக்கின்றனர். தங்களுக்குள் விவாகரத்து நடந்து விட்டாலும் தாங்கள் எப்போதும் நண்பர்கள் என்று நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் நடத்தும் ஈவெண்டுகளில் சைந்தவி கலந்து கொண்டு பாடல் பாடி கொண்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் உச்சி கொட்டிக் கொண்டிருந்தாலும் அதை எல்லாம் நாங்கள் கண்டு கொள்வதில்லை நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள் மட்டும்தான் என்று சைந்தவி சொல்லி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க சைந்தவி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து இருக்கிறார். சமீபத்தில் கூட சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு பொண்ணுக்கு சகோதரியாக மாறி இருக்கிறார்.
அந்த பெண்ணின் தந்தைக்கு கிட்னியில் 80 சதவீதம் செயலிழந்துவிட்டது என்பதால் தாய் தான் கிட்னி கொடுத்து உதவி இருக்கிறார். இதனால் தன் அப்பா மற்றும் அம்மா இருவராலும் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. இதை கேள்விப்பட்டதும் சைந்தவி இனி நான் உனக்கு கடைசி வரைக்கும் அக்காவாக துணை இருப்பேன் உனக்கு என்ன உதவிகள் என்றாலும் நானே செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சைந்தவி தன்னுடைய மகள் குறித்து பேசி இருந்தார். என்னுடைய மகளுக்கு நான் பாட்டு பாடினாலே பிடிக்காது. நான் பாட்டு பாடினால் தூங்க வைக்க போகிறேன் என்று அழுதுவிடுவாள். குழந்தையாக இருக்கும்போது எல்லா குழந்தைகளும் தாலாட்டு கேட்கும் ஆனால் என்னுடைய மகள் அதற்கு ஆப்போசிட். அவளுக்கு பாட்டு பாடி தூங்க வைக்கிறது பிடிக்காது என்று பேசி இருந்தார்.
அதுபோல என் பொண்ணுக்கு நான்வெஜ் சாப்பாடு ரொம்ப பிடிக்கும் அதிலும் பிரியாணி என்றால் அவளுக்கு அதிகமா பிடிக்கும். அவளுக்காக நான் விதவிதமா சமைப்பேன் என்று சொல்ல, அதற்கு தொகுப்பாளர் நீங்க பிராமின் தானே அப்போ கறி, மீன் எல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க, நான் சாப்பிட மாட்டேன் ஆனால் என்னுடைய பொண்ணுக்கு பிடிக்கும் அதற்காக நான் சாப்பாடு செஞ்சு கொடுப்பேன். என்னுடைய நண்பர்களுக்கும் நான் செஞ்சு கொடுப்பேன் சாப்பிடாமலேயே அவங்களுக்கு செய்து கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications