பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய பாடகி ஸ்வாகதா பதிவு! அவர் தானா?
சென்னை: பாலியல் தொந்தரவுகள் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என்று நினைத்து விடாதீர்கள் என்று ஆரம்பித்து பல பெண்களுக்கு நடந்ததாக கூறி அதிர்ச்சிகரமான விஷயங்களை பற்றி பாடகி ஸ்வாகதா வெளியிட்டுள்ள புதிய பதிவு மீண்டும் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஒரு பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் அத்துமிரல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த ஸ்வாகதா இப்போது பெயரை சொல்லாமல் மீண்டும் ஒரு சில முக்கியமான விஷயங்களை பதிவு செய்திருப்பது தான் இந்த விவாகரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஸ்வாகதா அளித்த பேட்டி வெளியான போது இந்த விவாகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுது. சென்னையில் ஒரு இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் தான் வேலை பார்த்தபோது தனக்கு பாலியல் ரீதியான அத்துமிரல்கள் நடந்ததாகவும், அந்த சம்பவத்தை பயன்படுத்தி தன்னை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு தன்னை போன்று பல பெண்களுக்கு அந்த இசையமைப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்து அதை அவருடைய ஸ்டுடியோவில் இருக்கும் கேமராவில் ரெக்கார்டு பண்ணி வைத்திருக்கிறார்? அதை சொல்லியே அந்த பெண்களை பிளாக்மெயில் செய்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார்.

இசையமைப்பாளர் மீது குற்றச்சாட்டு
அதோடு கதை அங்கே முடிந்துவிடவில்லை. நான் மட்டும் பாதிக்கப்பட்டவள் இல்லை பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி இருந்தார். அதோடு அந்த நபரின் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை ஆனால் சட்ட ரீதியாக சரியான நேரத்தில் பெயரை சொல்வேன் என்று அவர் பேசி இருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் சினிமாவை விட்டு விலகி ரிஷிகேஷில் சென்று வாழ ஆரம்பித்ததாகவும் பேசினார்.
இதற்கிடையே ஸ்வாகதாவின் பேட்டியை பார்த்ததும் பல இசையமைப்பாளர்களின் பெயர் அப்படிப்பட்டது. அவராக இருப்போமோ? இவராக இருக்குமோ? என்று சிலர் சொல்லி வந்த நிலையில் ஸ்வாகதாவுக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தனும் வெளிப்படையாக குரல் கொடுத்திருந்தார். யார் அந்த இசையமைப்பாளர் என்ற கேள்வி சோசியல் மீடியாவில் பெரியதாக வெடித்த நிலையில் இப்போது மீண்டும் ஒரு புதிய பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

ஸ்வாகதா மீண்டும் வெளியிட்ட பதிவு
அதில், இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர், அவர்களை கட்டாயப்படுத்தி பேச வைத்திருக்கிறார். எங்களின் கண்ணியத்தை பறித்து, பணத்தை பறித்து, மிரட்டி பிளாக்மெயில் செய்திருக்கிறார். இன்று கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சமூக வலைத்தள பின்பங்கள் குறித்தும், சமூகத்தின் மனநிலை குறித்தும், பி ஆர் நடைமுறை குறித்தும் பேட்டிகளில் பேசி வருகிறார். ஆன்மீக படம் ஒன்றுக்கு இசையமைக்கும் அவரை மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்கிறார்கள். இதைத்தான் சினிமா ஆதரிக்கிறது. இதை செய்ய சில பெண்களை முன் வருகிறார்கள் என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார்.
யார் அந்த இசையமைப்பாளர்
உடனே ரசிகர்கள் நீங்கள் சொல்வது யார் என்று வெளிப்படையாக சொல்லுங்கள் இப்படியே புதிர் மேல் புதிர் போட்டு பதிவு வெளியிட்டுக் கொண்டே இருந்தால் மற்ற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகின்றனர். அதோடு அவர் வெளியிட்ட பதிவை வைத்து இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பெயரும் அடிபடுகிறது. காரணம் இவர்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சோசியல் மீடியா பாகுபாடு, பிஆர் செயல்பாடுகள் போன்றவற்றை எல்லாம் பேசியிருந்தார்.

அதனால் அவரைத்தான் இவர் சொல்கிறாரா என்று ரசிகர்கள் பேச தொடங்கி விட்டார்கள். ஆனால் எந்த இடத்திலும் ஸ்வாகதா இசையமைப்பாளர் சாம் சி எஸ் பெயரை சொல்லவில்லை என்றாலும் அவரைப் பற்றியும் இவருடைய குற்றச்சாட்டுடன் இணைத்து பேசப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஸ்வாகதா யார் அந்த இசையமைப்பாளர் என்று சொன்னால் தான் முடியும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
