தனுஷோடு ஜோடி.. வாய்ப்பை தவறவிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. என்ன சொல்லி இருக்காங்க பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடிகை கோமதி பிரியா மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நடிகர் தனுஷ் நடித்து பெரிய அளவில் ஹிட்டான திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

அத்தோடு அது எந்த திரைப்படம் என்றும் கோமதி பிரியா பற்றி பல தகவல்களையும் இதில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் எதிர்பார்க்காத வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் இந்த சீரியலில் கதாநாயகி மீனா கேரக்டரில் பலருடைய அனுதாபங்களை பெற்றுக் கொண்டிருக்கும் நடிகை கோமதி பிரியா சமீபத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதுகளை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் விஜய் டிவியில் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி பிரியாவிற்கு அந்த சீரியல் முடிவடைந்ததும், அதே விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அத்தோடு இவர் முதல் முதலாக சீரியலில் அறிமுகமான ஓவியா கேரக்டர் மற்றும் வள்ளி, மீனா என்ற பெயர்கள் எல்லாம் உங்களுக்கு அப்படியே செட் ஆகி விடுகிறது அது எப்படி என்ற கேள்விக்கும் பதில் கொடுத்திருக்கிறார்.

அதில் சீரியலின் கதை என்னிடம் சொல்லும் போதே அந்த அந்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் ரொம்பவே ஆர்வமாக இருப்பேன். நான் நடிக்கும் கேரக்டரில் பெயர்கள் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி தான் என்றும் கூறுகிறார்.
அதுபோல சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனாவிற்கு எதிர்பாராத விதத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் இப்போது முத்து மீது மீனாவிற்கு காதல் வந்திருக்கிறது. ஆனால் மீனா மீது இருக்கும் அன்பை அடிக்கடி வெளிப்படுத்தும் முத்து தன்னுடைய காதலை இதுவரைக்கும் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவிற்கு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். அதுவும் அம்மு அபிராமி நடித்த கேரக்டர் முதலில் இவருக்கு தான் வந்ததாம். அந்த நேரத்தில் சீரியலுக்கு தேதி ஒதுக்கி இருந்ததால் என்னால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது குறித்து பெரிய வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு என்று கூறியிருக்கிறார்.

அத்தோடு இனி வரும் காலங்களில் முறையாக திட்டமிட்டு சரியாக வாய்ப்புகளை சினிமாவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளில் கோமதி பிரியா ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். சின்னத்திரையில் பலருடைய மனதை கவர்ந்த இவரை இனி வெள்ளித்திரையில் விரைவாக பார்க்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இவருக்கு சின்னத்திரையில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் வெள்ளி திரையில் சீக்கிரமாக வரவேண்டும் என்று ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications