சிறகடிக்க ஆசை: முத்துவிடம் வசமாக சிக்கும் மனோஜ்.. விஜயா ஆட்டம் ஆரம்பம்.. ஒரு வழியாக மாறிய கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் ரோகிணியுடன் நெருக்கமாக இருப்பதை முத்து வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். அதே நேரத்தில் கனகா குடும்பத்திலிருந்து மனோஜ்க்கு பிரச்சனை வருகிறது. இந்த இரண்டு பக்க அடியிலும் மனோஜின் மொத்த உண்மைகளும் தெரிய வருமா? இல்லையா? என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ரோகிணி மனோஜின் குழந்தையை அபார்ஷன் பண்ண வேண்டும் என்றால் நீ கிரிஷிடம் நெருங்கி பழக வேண்டும் என்று அக்ரீமெண்ட் போட்டு இருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் மனோஜும் ரோகிணி சொன்னபடி நடக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் ரோகிணி கிரிஷை கூட்டிக்கொண்டு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர்.

Siragadikka Aasai serial

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

அங்கு மனோஜ் வருகிறார். பிறகு 3 பேரும் ஒன்றாக அந்த ரெஸ்டாரண்டுக்குள் போவதை அந்த பக்கமாக கஸ்டமரை கூட்டிக் கொண்டு வந்த முத்து பார்த்து விடுகிறார். பிறகு முத்து அந்த ரெஸ்டாரண்டுக்குள் சென்று 3 பேரும் ஒன்றாக சாப்பிடுவது பேசிக் கொண்டிருப்பது, பேசி சிரித்து கொண்டிருப்பது எல்லாவற்றையும் வீடியோ எடுத்து விடுகிறார். ஏற்கனவே விஜயாவிற்க்கும் மனோஜியின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதால் ஸ்ருதி மற்றும் மீனாவையும் மனோஜை ஃபாலோ பண்ண சொல்லி இருக்கிறார். அதற்கு முன்பு முத்து இப்போது வீடியோ ஆதாரமே எடுத்து வைத்து விட்டார்.

சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நாளைக்கு இன்று வெளியான ப்ரோமோவில் கனகா மனோஜ்க்கு பவுடர் போட்டு, பொட்டு வைத்து தலையில் கொண்டை போட்டு விடுகிறார். பிறகு கனகாவிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வரும் மனோஜ் முகத்தை கழுவி இருக்கிறாரே தவிர தலையில் இருக்கும் கொண்டையை அவிழ்க்காமல் வந்து விடுகிறார்.

இதை பார்த்த மொத்த குடும்பத்தினரும் மனோஜை கிண்டல் பண்ணுகின்றனர். இதனால் விஜயா கடுப்பாகிறார். ஆனால் ப்ரோமோவில் பார்த்தால் முத்து வீடியோவை காட்டாதது போல தான் தெரிகிறது. மனோஜால் ஏதாவது பிரச்சனை பண்ணும்போது தான் இந்த வீடியோ ஆதாரத்தை முத்து காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+