சிறகடிக்க ஆசை: சிட்டியிடம் ரோகிணி கடன் வாங்கி இருக்காங்க! போட்டு கொடுத்த சத்யா.. முத்து கண்டுபிடித்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி சிட்டியிடம் இரண்டு முறை கடன் வாங்கி இருக்கும் விஷயத்தை சத்யா மீனாவிடம் சொல்லி இருக்கிறார். அதை மீனா முத்துவிடம் சொன்னதால் முத்து ரோகிணி பற்றிய அடுத்த உண்மையை கண்டுபிடிக்க போகிறார்.
ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே சிறகடிக்க ஆசை சீரியலில் கதை திருப்பம் வந்திருக்கிறது. என்னதான் ஜீவாவிடம் பணம் வாங்கிய விஷயம் வீட்டில் மாட்டினாலும் ரோகிணி அதில் இருந்து தப்பித்து விடுவார் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தனர்.

ஆனால் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் இப்போது விஜயா தன்னுடைய மொத்த கோபத்தையும்
ரோகிணி மீது காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரோகிணி பற்றிய அடுத்த உண்மை சத்யா மூலமாக மீனாவுக்கு தெரிய வந்திருக்கிறது.
அதாவது ரோகிணி ஏற்கனவே இரண்டு முறை சிட்டியிடம் கடன் வாங்கினார் என்று சத்யா போட்டு கொடுக்க, அதை முத்துவிடம் மீனா சொல்கிறார். உடனே முத்து ஏற்கனவே எனக்கும் சிட்டிக்கும் பிரச்சனை இருக்கிறது, அவன்தான் பாரில் என்னை வீடியோ எடுத்து பிரச்சனையில் சிக்க வைத்தது என்று இந்த ரோகிணிக்கு தெரியும் தானே? ஆனால் தெரிந்தும் அவன் கிட்ட கடன் வாங்கி இருக்காங்கன்னா இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல வேறு ஏதோ ஒரு விஷயமும் இருக்கு அதை சீக்கிரமா கண்டுபிடிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு அடுத்த நாள் காலையில் மீனா எல்லோருக்கும் சாப்பாடு வைத்து கொண்டு இருக்கும்போது ரோகிணியை சாப்பிடுவதற்காக அண்ணாமலை கூப்பிடுகிறார். அப்போது ரோகிணி வழக்கம்போல டைனிங் டேபிளில் உட்கார்ந்ததும் என் முன்னாடி டைனிங் டேபிளில் இருக்க கூடாது எழுந்து நில்லு என்று விஜயா விரட்டி விடுகிறார். அதற்கு ரவியும் ஸ்ருதியும் ரோகிணிக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள்.

ஆனால் ரோகிணி அத்தைக்கு என் மேல எப்போ கோபம் குறையுதோ நான் அப்போ உக்காந்துக்குறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் இந்த வீட்டில் இவங்க ரெண்டு பேரால தான் நிம்மதியே இல்லாம போயிடுச்சு என்று முத்து மற்றும் மீனாவை ஜாடையாக சொல்ல முத்துவும் மீனாவும் மனோஜ்க்கு பதிலடி கொடுக்கிறார்கள்.
அடுத்ததாக ரோகிணி அண்ணாமலையிடம் நான் உங்க பையனுடைய நல்லதுக்காகத்தான் மாமா இப்படி செஞ்சேன். என்னை மன்னிச்சிடுங்க. அந்த பணத்தை வீட்டில் வந்து கொடுத்திருந்தால் முத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று பிரிச்சி கேட்டிருப்பார். ஆனால் மனோஜ் இருந்த நிலைமையில் பணத்தை பிரிக்க முடியாத சூழ்நிலை இருந்ததால்தான் நான் அதை பிசினஸ் போட்டுட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை மனோஜ் தான் எப்பவும் தப்பு பண்ணிட்டே இருப்பான் நீ தான் அவனை திருத்துவேன்னு நினைச்சேன் ஆனா நீயும் அதே போல பண்ணிட்ட நீ அந்த பணத்தைப் பற்றி வீட்டில் சொல்லி இருக்கணும். இப்படி மொத்தமா மறைத்திருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.
அடுத்ததாக ரோகிணி பார்வதி வீட்டிற்கு வருகிறார். பார்வதி ரோகிணி சாப்பிடாததால் அவரை சாப்பிட வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் ரோகிணி வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். பிறகு ரோகிணி பிரச்சனையில் இருப்பதை பார்த்து பார்வதியும் கண்கலங்கி அழுகிறார். நான் உனக்காக விஜயாவிடம் பேசுறேன் அவ கோபத்தை குறைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications