சிறகடிக்க ஆசை: பார்வதிக்கு வந்த பிரச்சனை! ரோகிணி பற்றி அடுத்த உண்மையை கண்டுபிடிக்கும் முத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் 2025 ஜூலை 29ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ்-ரோகிணி பிரச்சனையில் ஒரு சமாதானம், விஜயாவின் வழக்கமான குணாதிசயம், மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பானது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், அண்ணாமலை கிரிஷ்க்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, விஜயா பார்வதியிடம் தனது நடனப்பள்ளி பிரச்சனை குறித்துப் பேசுகிறார். பார்வதி, "முத்துவும் மீனாவும் போயிருக்காங்கல்ல, கண்டிப்பா அவங்க பிரச்சனை சரி பண்ணிட்டு தான் வருவாங்க, நீ பயப்படாதே," என்று ஆறுதல் கூறுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கொஞ்ச நேரத்தில் முத்துவும் மீனாவும் வந்து, தீபன் மற்றும் ரதி குடும்பம் சமாதானமாகி விட்டதாகவும், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதைக் கேட்டதும் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

விஜயாவின் மாறாத குணம் - ஸ்ருதியின் கேள்வி

உடனே விஜயா, "மனோஜ் போனாலே எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டு தான் வருவான்," என்று வழக்கம் போல முத்துவும் மீனாவும் செய்த உதவியை மறந்து பேசிவிட்டு, பெருமைப்படுகிறார். இதைக் கண்ட ஸ்ருதி, "நேத்து நைட் இந்தப் பிரச்சனையால் நீங்க தூங்காம இருந்தீங்கன்னு அங்கிள் சொன்னாரு. அப்படி இருக்கும்போது நீங்க இப்படிப் பேசுறீங்க," என்று விஜயாவைக் கேள்வி கேட்கிறார்.

முத்துவின் அடுத்த திட்டம்

முத்து, "கொஞ்ச நாளைக்கு டான்ஸ் கிளாஸ் வேண்டாம்," என்று சொன்னதும், "என்னால சும்மா எல்லாம் இருக்க முடியாது," என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை, "மீனா கூட சென்று பூ கட்டிக்கொடு," என்று சொல்ல, விஜயா, "என்னால எல்லாம் அந்த வேலையைச் செய்ய முடியாது. வேணும்னா மனோஜ் கடையில் கல்லாவில் உட்கார சொன்னால் உட்காருவேன்," என்று சொல்கிறார். இதைக் கேட்டு மனோஜும் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றனர். "என்னால சும்மா இருக்க முடியாது. நான் ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கொண்டு தான் இருப்பேன், நான் யோசிக்கிறேன்," என்று முத்து கூறுகிறார்.

ரோகிணியின் பாசம்

மறுபக்கம், மனோஜ் ரூமில் ரோகிணிக்கு பீட்சா எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். வெளியில் கிரிஷ் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரோகிணி மனோஜிடம், "பீட்சா கொடுக்கலாமா?" என்று கேட்க, மனோஜ், "அவனுக்கு எதுக்கு கொடுக்கணும்?" என்று கேட்கிறார். "அந்தப் பையன் வீட்ல இருக்கும்போது வீட்ல இருக்கட்டும். உனக்கு குழந்தை என்றால் பிடிக்காதா?" என்று ரோகிணி கேட்க, "குழந்தைகளை யாருக்குப் பிடிக்காமல் இருக்கும், சரி கொடு," என்று மனோஜ் சம்மதிக்கிறார். ரோகிணி சந்தோஷமாக கிரிஷை கூப்பிட்டு பீட்சா கொடுக்க, கிரிஷ் அதைச் சாப்பிடுகிறான்.

மீனாவின் சந்தேகம்

மறுபக்கம் மீனா சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து கிரிஷை அழைக்கிறார். கிரிஷ், "நான் இங்க இருக்கேன் ஆண்ட்டி," என்று சொல்லிவிட, மீனா ரோகிணி ரூமை திறந்து பார்க்கிறார். கிரிஷ் பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாகச் சென்று விடுகிறார். உடனே முத்துவிடம் சென்று, "ரோகிணி கிரிஷ் கிட்ட அக்கறையா இருக்காங்க. அவனும் ஆண்ட்டி ஆண்ட்டி என்று பாசமா இருக்கான்," என்று சொல்கிறார். அதற்கு முத்து, "அந்தப் பார்லர் அம்மா அம்மா ஏதோ ஒரு பெரிய பிரச்சனையை மறைக்குது. கண்டிப்பாக கண்டுபிடிக்கணும்," என்று சொல்ல, ரோகிணி மறைந்திருந்து இதைக் கேட்கிறார்.

பார்வதி வீட்டில் தீபன் - ரதி குடும்பத்தினர்

மறுபக்கம், பார்வதி வீட்டுக்கு தீபன் மற்றும் ரதி குடும்பத்தினர் போக, பார்வதி "என்ன விஷயம்?" என்று கேட்கிறார். "எங்க பொண்ணு இது மாதிரியானதுக்கு இந்த வீடு தான் காரணம்," என்று அவர்கள் சொல்ல, "அவங்க ரெண்டு பேர் பண்ண தப்புக்கு என்னோட வீடு எப்படி காரணமாக இருக்கும்?" என்று பார்வதி கேட்கிறார். "நான் உங்களை நம்பி தான் அனுப்பி வைத்தேன்," என அவர்கள் சொல்கிறார்கள். இதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+