சிறகடிக்க ஆசை: தப்பா பேசிய விஜயா.. ரோகிணி செய்த மோசமான செயல்.. மாஸ் காட்டிய ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா அடுத்த கட்டத்தில் முன்னேறுவதற்கு ஸ்ருதியும் ரவியும் உதவி செய்கின்றனர். அதே நேரத்தில் மீனாவின் வேலையை கெடுப்பதற்காக அவருடைய எதிரி விஜயா மூலமாக புது பிளான் போடுகிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா தனக்கு கிடைத்த பெரிய ஆர்டர் பற்றி முத்துவிடம் சொன்னதும், முத்து எப்படி மீனா உனக்கு இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்தது என்று சந்தோஷப்படுகிறார். அதற்கு மீனா இது சத்யா தான் வாங்கி கொடுத்தான் என்று நடந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு இவ்வளவு பெரிய ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பணம் அதிகமாக தேவைப்படுமே என்ன பண்ண என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது மீனா ஸ்ருதி இடம் கேட்டு பார்ப்போமா என்று சொல்லி ரவி, ஸ்ருதியிடமும் பேசப் போகிறார்கள். அவர்கள் முத்து மீனாவை பார்த்ததும் என்ன விஷயம் என்று விசாரிக்கின்றனர். அப்போது மீனா தனக்கு கிடைத்த பெரிய ஆர்டர் பற்றி சொன்னதும் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வாழ்த்துக்கள் சொல்கின்றனர். அப்போது எங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது என்று முத்து சொல்கிறார்.

அதற்கு ரவி ஸ்ருதியின் முகத்தை பார்க்குறார் உடனே ஸ்ருதி என் முகத்தை ஏன் பாக்குற என்று கேட்கிறார். அதற்கு மீனா அவர் உங்களிடம் சம்மதம் கேட்கிறார் உங்களால் முடிந்தால் கொடுங்க ரெண்டு பேரும் பேசிட்டு அப்புறமா சொல்லுங்க என்று கிளம்ப போகிறார்கள். அதற்கு ஸ்ருதி நாங்க ரெண்டு பேரும் இதில் பேசுவதற்கு ஒண்ணுமே இல்ல, நீங்க இன்னமும் வளரனும். நான் உங்களுக்கு பணம் தரேன் என்று ஸ்ருதி போனில் பணத்தை அனுப்ப எடுக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது ரவி நான் தான் கொடுப்பேன் என்று தடுக்கிறார். பிறகு இருவரும் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று அனுப்புகிறார்கள். அதைத் தொடர்பு விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் பிசினஸ் எதிரி சிந்தாமணி விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சிந்தாமணிக்கு ஒரு போன் வருகிறது. அதில் அவருடைய கையால் நமக்கு ஒரு மண்டபத்தில் ஆர்டர் தராமல் மீனாவுக்கு ஆர்டர் கொடுத்துட்டாங்க என்று சொன்னதும் சிந்தாமணி கோபப்படுகிறார். பிறகு அதைப்பற்றி சிந்தாமணி யோசித்துக் கொண்டிருக்கும் போது விஜயா என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு சிந்தாமணி நான் கேள்விப்பட்ட விஷயம் எனக்கு அதிர்ச்சியா இருக்கு. நீங்க என்கிட்ட இவ்வளவு பாசமாகவும், அன்பாகவும் நடந்துக்கிறீங்க. ஆனா உங்க மருமக உங்கள தப்பு தப்பா பேசிட்டு இருக்கிறா. உங்களுக்கு அவளை பிடிக்கலையாம். அதனால தான் அவன் பூக்கட்டி உங்க கொட்டத்தை அடக்குவதற்காக பிளான் பண்ணி இருக்காங்களாம். இதை கேட்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொன்னதும் விஜயா கோபப்படுகிறார்.

அதோடு உங்க மருமகள் இப்ப ஒரு ஆர்டர் எடுத்து இருக்கிறா. அதை செஞ்சு முடிச்சிட்டான்னா அவனுக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும், அப்புறம் உங்கள மதிக்க மாட்டா என்று ஏத்தி விடுகிறார். இதனால் விஜயா வீட்டிற்கு கோபமாக வந்து மீனாவிடம் சண்டை போடுகிறார்.

நடிகை உடன் காதலை அறிவித்த விஜய் டிவி சீரியல் ஹீரோ.. ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி ஆகிடுச்சு
என்னை பத்தி ஊரெல்லாம் நீ என்ன பேசிட்டு திரிகிறன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. நீ வீட்டுக்குள்ள தான் அத்தை அத்தை என்று என் முன்னாடி நடிச்சிட்டு இருக்கிற என்று திட்ட, அதற்கு மீனா என்ன நடந்தது என்று தெரியாமல் உங்களிடம் யார் என்னை பத்தி தப்பா சொன்னா? நான் எதுவுமே உங்களை பத்தி யாரிடமும் பேசலையே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த சீரியல் நடிகர் தான் என் கணவர்.. விஜயகாந்த் எனக்காக சொன்ன வார்த்தை! நெகிழ்ந்த விஜய் பட கதாநாயகி
அப்போது ரோகிணி விஜயாவிற்கு சப்போர்ட் செய்து மீனா மீது விஜயா மேலும் கோபப்படுற மாதிரியே எடுத்துக் கொடுக்கிறார். அதற்கு அண்ணாமலை உன் கிட்ட மீனா தப்பா பேசினா என்று சொன்னது யாரு என்று கேட்க, அதெல்லாம் தெரிஞ்சவங்க தான் சொன்னாங்க என்று விஜயா சொல்கிறார். ஆனால் சிந்தாமணி பெயரை சொல்லவில்லை. அப்போது மீனாவிற்கு சப்போர்ட்டாக ஸ்ருதி பேசுகிறார். அதனால் விஜயா கோபப்பட்டு திட்டி விட்டு வெளியே போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+