சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு குவிந்த பணம்.. ரோகிணியால் ஏமாந்த விஜயா! பிரச்சனையில் சிக்கிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவிற்காக மீனா மற்றும் அண்ணாமலை எதிர்பார்க்காத செயலை செய்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணியால் மீனா பிரச்சனையில் சிக்குகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜை ரவுண்டு கட்டி குடும்பத்தினர் கேள்வி கேட்கின்றனர். அப்போது காசு கொடுக்காதது கூட பிரச்சனை இல்ல, சந்தோஷி சார் பணம் கொடுத்ததை ஏன் எங்களிடம் சொல்லலை என்று கேள்வி கேட்க, அதற்கு மனோஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் காசு கொடுக்கலாம் என்று இருந்தேன் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

உடனே ரோகிணியிடம் மீனா உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, மனோஜ் சொல்வது போல் அவரும் சொல்ல ஸ்ருதி மனோஜ்க்கு டப்பிங் கொடுத்துட்டு இருக்கீங்களா என்று கேட்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான ரவி மனோஜை அடிக்க போக அண்ணாமலை தடுத்து நிறுத்தி ரோகிணி மற்றும் மனோஜை உட்கார வைத்து சந்தோஷ் சார் போன் பண்ணி பேசினாரா? என்று பொறுமையாக ஒவ்வொன்றாக கேட்க எல்லாத்துக்கும் பதில் சொல்லும் மனோஜ் பணத்தை கொடுக்க சொன்னதை ஏன் சொல்லல என்று கேட்க வரும்போது முடிஞ்சதுக்கு அப்புறம் கொடுக்கலாம்னு இருந்தேன் என்று சொல்ல அண்ணாமலை கோபமடைந்து மனோஜை துரத்தி அடிக்க வருகிறார்.
அவரை முத்து மற்றும் ரவி தடுக்கின்றனர் அப்போது ரோகிணி மனோஜ் போனை எடுத்து இருவருக்கும் பணத்தை அனுப்பி விடுகிறார். பிறகு அப்பா அம்மாவுக்கு அனுப்பு என்று சொல்ல அண்ணாமலைக்கு அனுப்பி விடுகிறார். அம்மாவுக்கு போடு என்று ரவி சொல்ல அம்மாவுக்கு 15000 தான் போடுவேன் என்று சொல்கிறார்.
உடனே கம்மியா எல்லாம் வாங்காத விஜயா என்று அண்ணாமலை சொல்ல ரவி அம்மாவுக்கு கம்மியா கொடுத்து ஏமாத்த பார்க்கிறான் இப்பவே அனுப்புடா என்று சொல்ல நேத்து அம்மாவுக்கு 10,000 கொடுத்துட்டேன் என்று மனோஜ் சொன்னதும் அண்ணாமலை எழுந்து வந்து விஜயவிடம் பத்தாயிரம் கொடுத்ததை ஏன் சொல்லவில்லை என்று கேட்க விஜயா முடிஞ்சதுக்கு பிறகு சொல்லிக்கலாம் என்று அவரும் ஆரம்பிக்க அதனால் கோபமான அண்ணாமலை யார் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கத்திவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கத்தில் முத்து கார் பைனான்ஸ் கட்ட போகிறார். அங்கு ஏற்கனவே உங்களுக்காக கட்டிட்டாங்க என்று சொன்னதும் யார் என்று முத்து கேட்க மீனா என்று சொல்கிறார்கள். பிறகு மீனா வந்து நான் உங்களுக்காக கட்டிட்டேன் உங்க அண்ணன் தந்த பணத்தை வச்சி தான் கட்டுனேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அண்ணாமலை செல்வத்துடன் வருகிறார். அவரும் நான் உனக்கு பைனான்ஸ் கட்டலாம்னு வந்தேன் என்று சொல்ல, முத்து மீனாவும் எங்க அப்பாவும் எனக்கு கிடைத்த பெரிய கிப்ட் என்று சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது பார்வதி மீனா பூவுக்கு காத்திருக்கிறார். உனக்கு வேற யாரும் இல்லையா? என்று திட்ட, அதற்கு பார்வதி வேற யாரிடமும் மீனாவிடம் இருப்பது போல பிரஷான பூ கிடைக்காது என்று சொல்கிறார். பிறகு மீனா பூவை கொடுத்துவிட்டு கிளம்பும்போது மழை வர மாதிரி இருக்கு போய் துணி எடுக்க போகணும் என்று பார்வதி சொன்னதும் நானே போய் எடுத்துட்டு வரேன் என்று மீனா போகிறார். அப்படியே மடித்து வைத்து விடு என்று விஜயா சொல்ல மீனா சரி என்று மடித்து வைத்து விடுகிறார்.
அந்த நேரத்தில் விஜயாவிடம் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கும் ரதியின் அம்மா புடவை வியாபாரம் செய்ய வருகிறார். அவரிடம் விஜயா புடவையை வாங்கியதும் பணம் எடுக்க பார்வதி போகும்போது அங்கு பணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் பதறிப் போய் விஜயாவை கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்ல அவரும் அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications