எங்க வீட்டில் விசேஷம்! மனைவியோடு மகிழ்ச்சியை பகிர்ந்த சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பலருடைய ஃபேவரிட் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றி வசந்த்க்கு கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. அவருடைய மனைவி வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியல் கதாநாயகி தான். இந்த தம்பதி தான் இப்போது தங்களுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.
பொதுவாக சீரியல்களில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சீரியலில் அண்ணன் தங்கையாக ஒரே ஒரு எபிசோடில் நடித்த ஜோடி காதலித்து திருமணம் செய்தது கடந்த வருடத்தில் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் அந்த தம்பதி தங்களை பற்றிய வதந்திகளையும் ட்ரோல்களையும் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக தங்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள். அது வேறு யாரும் இல்லை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி தான்.

வெற்றி வசந்த் விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை பல ஆண்கள் தன்னை போன்ற கேரக்டரில் இருப்பதாகவே பார்த்து வருகிறார்கள். கோவப்படும் இடத்தில் தன்னுடைய கோபத்தை டக்கென காட்டிவிடுவார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்திற்கும், மனைவி குடும்பத்திற்கும் மரியாதையும் கொடுப்பார். ஆனாலும் எல்லாரிடமும் அவமானப்பட்டு அனுதாபத்தையும் பெற்று விடுகிறார்.
ஐயா முத்து நீ எங்க வீட்டு சொத்து என்று எல்லாரும் கொண்டாடுற மாதிரி தான் வெற்றி இப்போது சின்னத்திரை விஜய் சேதுபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி வைஷ்ணவியும் லேசப்பட்டவங்க இல்ல, இவங்களும் சின்ன சின்ன வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தான் சீரியலில் கதாநாயகி ஆனாங்க. ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியலில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு பொன்னி சீரியலில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் கூட இவரெல்லாம் கதாநாயகியா? என்று கூட சிலர் கலாய்த்து வந்தனர். ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்தார். சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்தது. கல்யாணத்திற்கு பிறகு இந்த ஜோடியை நிம்மதியாய் இருக்க விடுறாங்களானா அதுவும் கிடையாது.. வெற்றிவசந்துக்கு ஏத்த ஜோடி நீ இல்லம்மான்னு சிலர் வைஷ்ணவியை டேக் செய்து கமெண்ட் போட்டு இருக்காங்க.
ஒரு கட்டம் வரைக்கும் அமைதியா இருந்த வைஷ்ணவி ஒரு நாள் பொங்கி எழுந்து அழுதுட்டாங்க. அதற்குப் பிறகு வெற்றி தன்னுடைய மனைவியோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து உனக்கு நான்கு இருக்கிறேன் என்று சப்போர்ட்டை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு வைஷ்ணவியின் அப்பா இறந்து போயிட்டார்.

அப்போதும் வெற்றி வசந்த தன்னுடைய மாமனார் இறப்பிற்கு உருக்கமாக நீண்ட பதிவை போட்டு இருந்தார். அந்த பதிவை பார்பவர்களுக்கு இவர் மருமகன் மட்டுமல்ல அந்த குடும்பத்திற்கு ஒரு மகனாகவே இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வைத்தது. அதுபோல பல பேட்டியில் வெற்றி தன்னுடைய மாமனார் மற்றும் மனைவி குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல வைஷ்ணவியும் சோசியல் மீடியாவில் வெற்றி வசந்த்தை டேக் செய்து அதிகமான போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று இந்த தம்பதி தங்களுடைய திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் வெற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவில் "ஒரு வருடம் ஆன போதிலும் உன்னை நேசிக்கும் என் காதல் முதல் நாள் போல இன்னும் தீவிரமாகவும் ஆழமாகவும் உள்ளது... என் மனைவியே! மேன்மேலும் இணைந்து வளர்ந்து, வாழ்ந்து.. உயர்வோம்! என்றென்றும் காதலுடன் உன் கணவன் அன்பு மாமா" என்று அந்த பதிவுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நாமும் நம்முடைய வாழ்த்தை தெரிவித்து கொள்வோமா நண்பர்களே?
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications