For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீதர் சார் முதலில் இளையராஜா சாரை ஏத்துக்கலை...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சந்தான பாரதி, ஸ்ரீதர் சார் முதலில் இளையராஜா சார் பத்தி நான் சொன்னபோது ஏத்துக்கலை என்று சொன்னார்.

தான் சினிமா துறைக்கு வந்தது ..படத்தில் நடித்த அனுபவம் பற்றி எல்லாம் விரிவாக பேசினார்.

படங்களை இயக்குவதை விட நடிப்பது, டயலாக் பேசுவது என்றால் கை உதறும் என்றும் சிறு பிள்ளை போல கூறினார்.

 கமல் நான்

கமல் நான்

எப்படி சினிமா துறைக்கு வரணும்னு எண்ணம் வந்தது என்று கேட்டபோது நான், ராதாரவி, கமல் எல்லாரும் ஃ ப்ரண்ட்ஸ்.. எப்போதும் கே.பி சாரோட புது படங்கள் எல்லாத்தையும் பார்த்துருவோம். அப்போதுதான் எனக்கும் சினிமா துறைக்கு வந்தால் நல்லாருக்குமேன்னு தோணுச்சு.

சிறந்த தாய்க்கான கதாபாத்திரம்...சன் குடும்ப விருதுகள்...!சிறந்த தாய்க்கான கதாபாத்திரம்...சன் குடும்ப விருதுகள்...!

 சென்னைக்கு வந்து

சென்னைக்கு வந்து

சென்னைக்கு வந்து கவிஞர் கண்ணதாசன் சாரை பார்த்தேன்..அசிஸ்டென்ட் டைரக்டராகலாம்னு இருக்கேன்னு சொன்னேன். அப்படியா.. யாருகிட்டன்னு கேட்டார்.கே.பி சார்கிட்டேன்னு சொன்னேன். முயற்சி செய்து பார்க்கலாம்னு சொன்னார். அப்புறம் ஒரு நாள் ஸ்ரீதர் சார்கிட்ட போறியான்னு கேட்டார். நான் உடனே ஓகே சொல்லிட்டேன்.

 இளமை ஊஞ்சலாடுகிறது

இளமை ஊஞ்சலாடுகிறது

இளமை ஊஞ்சலாடுகிறது படம் எடுக்கும்போது நான் டைரக்டர் சார்கிட்ட சொன்னேன்... கமல்னு ஒரு பையன் நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கான்.. அவனை நடிக்க வைக்கலாம் சார்னு ஏத்துக்கிட்டார். அப்புறம் ரஜினின்னு ஒரு பையன் நடிச்சுக்கிட்டு இருக்கான்னு சொன்னேன். ரஜினிகாந்த் யாரு அதுன்னு கேட்டார்..அப்புறம் ஏத்துக்கிட்டார்.

 அன்னக்கிளி படம்

அன்னக்கிளி படம்

அன்னக்கிளி படத்துக்கு இளையராஜா மியூசிக் போட்டப்போ இசையை கூட ஒரு ஹாலில் ரிகர்சல் போட்டு பார்த்துகிட்டு இருந்தார் இளையராஜா. அப்பவே நான் சொன்னேன்.. பாட்டு எல்லாம் ஹிட்டாகும் அமர்ன்னு.. இளையராஜா அமர்லாம்.. பாவலர் இருந்தப்பவே எனக்கு பழக்கம்.

 இளையராஜா பத்தி

இளையராஜா பத்தி

இளையராஜா பத்தி நான் எங்க டைரக்டர்கிட்டே சொன்னேன்... அன்னக்கிளின்னு ஒரு படத்துல இசை அமைச்சு இருக்கார் இளையராஜான்னு ஒருத்தர். நல்லா போட்டு இருக்கார் அவரை போடலாம்னு. அவர் சொன்னார் எனக்கும் விஸ்வநாதனுக்கு 20 வருசத்துக்கும் மேல பழக்கம்.. புதுசா மாத்த சொல்றியான்னு..

 கம்போசிங் நடக்குது

கம்போசிங் நடக்குது

சரின்னு நானும் வாசுவும் வந்துட்டோம்.. உதவியாளர் பின்னாடியே வந்து கம்போசிங் நடக்குது டைரக்டர் கூட்டிட்டு வர சொன்னார்னு கூப்பிட்டார். போயி பார்த்தா அமர், இளையராஜா எல்லாம் இருக்காங்க.. என்ன்னனு கேட்டால் ..அப்படித்தான் வா வான்னு அமர் சொல்றார்னு சொன்னார்.

 மறக்க முடியாது

மறக்க முடியாது

கமல் படம் எத்தனையோ டைரக்ட் பண்ணி இருக்கேன்... அதுல இன்னிக்கு பார்த்தாலும் எனக்கு கண்ணில் தண்ணி வருவது... அந்த ஜெயில் காட்சிதான். ஜெயிலில் கமல் இருக்கும்போது மகள் பார்க்க வருவாங்க. அப்போது அந்த பெண் வயதுக்கு வந்தது பற்றி பாட்டி சொல்லும் காட்சி..இப்போது பார்த்தாலும் கண்ணீர் வரும் என்று சொன்னார்.

கிரேசி மோகனின் நகைச்சுவை, மைக்கேல் மதன காமராஜன் படத்தின் நகைச்சுவை காட்சிகள் என்று இன்னும் பல சுவையான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார் இயக்குனர் சந்தான பாரதி.

English summary
Director of Santhan Bharati, who was attending Sun TV's Hello Tamil program, said that Sridhar sir was the first Ilayaraja sir when I read the paragraph.He came into the cinema industry.As a child, he said that acting rather than directing films, dialogue would help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X