For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வயசா முக்கியம்.. நெஞ்சைத் தொடும் குறும்படத்துடன்.. கலக்கும் ஸ்ரீபிரியா

Google Oneindia Tamil News

சென்னை: சாதிப்பதற்கு வயது, சூழ்நிலைகள் தேவையில்லை என்று சாதித்துக் காட்டி இருக்கிறார் ஸ்ரீப்ரியா.

ஸ்ரீப்ரியா தமிழ், தெலுங்கு ,கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் . ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு சினேகா, நாகர்ஜூன் எனும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர் .

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக மின்னிக் கொண்டிருந்த இவர் இப்பொழுது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரண்டு திரைப்படங்களையும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களையும் இயற்றியுள்ளார். அரசியலிலும் இருக்கிறார்.

வீழ்வேனென்று நினைத்தாயோ? மீண்டெழுவேன் -நான் சென்னை- அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அசத்தல் பிரசாரம் வீழ்வேனென்று நினைத்தாயோ? மீண்டெழுவேன் -நான் சென்னை- அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அசத்தல் பிரசாரம்

 கேபி இயக்கத்தில்

கேபி இயக்கத்தில்

தமிழில் ஸ்ரீபிரியா 1974 ஆம் ஆண்டு கே பாலசந்தர், அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்துல அநேகமாய் எல்லோருமே புதுமுகங்கள்தான். இப்படி நடித்து மாபெரும் வெற்றி பெற்றது அந்த திரைப்படம். அந்த படத்துல நாயகியின் இளவயது விதவை தங்கையாக குணச்சித்திர பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார். அப்போது முன்னேறி வரும் கதாநாயகனாக இருந்த கமலஹாசனை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 ஸ்ரீபிரியா அப்படித்தான்

ஸ்ரீபிரியா அப்படித்தான்

முழுமையாக அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் மிக அதிகமான படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவரது நடிப்பில் மைல்கல்லாக திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். தாம் சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தை மிக இயல்பாக நடித்திருப்பார். இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 சூப்பர் குறும்படம்

சூப்பர் குறும்படம்

தற்போது ஊரடங்கு காலத்திலும் உங்களால் ஜெயிக்க முடியும் அப்படிங்கிறது எந்த வயசானாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஒரு சமூகத்திற்கு ஒரு கருத்துள்ள படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா. ஸ்ரீபிரியா எழுதி இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. இதில் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

 நாசர் - ஸ்ரீபிரியா

நாசர் - ஸ்ரீபிரியா

குறைந்தபட்ச வசதிகளைக் கூட மிகச் சரியாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்று தன்னுடைய கொடியை நாட்டி சாதனை புரிபவர்கள் தான் நிபுணர்கள். நாசர் மற்றும் ஸ்ரீபிரியா இணைந்து வழங்கும் இந்த குறும்படம் இதை நிரூபிப்பது போல் அமைந்திருக்கிறது. குறும்படம் என்ற கட்டுக்குள் அடங்கினாளும் நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்த நிறைவான படம் என்றுதான் கூறவேண்டும்.

 ஊரடங்கு கதை

ஊரடங்கு கதை

யசோதா படத்தின் கதை ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை ஆழமாக விவரிக்கிறது. ஊரடங்கு காலத்தில் உள்ளது உள்ளபடி துல்லியமாக முழுமையுடன் பார்வையாளர்களை கடத்துகிறது இந்த குறும்படம் என்று சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் கஸ்தூரி தம்பதியர்களுக்கு குழந்தை இல்லை. தேசிய அளவிலான ஊரடங்குக்கு சற்று முன்னதாக வீட்டு வேலைக்காரப் பெண் பொறுப்பில் மனைவியை விட்டுவிட்டு சொந்த ஊரில் இருக்கும் தன் வயதான தாயாரை பார்க்க புறப்படுகிறார் ஸ்ரீதர்.

வரவேற்பு

வரவேற்பு

ஊரடங்கு காரணமாக சென்னைக்கு திரும்பி வர இயலாத நிலையில் ஸ்ரீதரால் தன் மனைவியையோ வேலைக்கார பெண்ணிடம் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எங்கே போனார் இந்த கஸ்தூரி என்று கேள்விக்குறியுடன் இந்த கதை நின்றாலும் படத்தில் இதற்கு விடை இருக்கிறது. ஸ்ரீபிரியா நாசர் ஆகியோருடன் நித்தியா ஸ்ரீகாந்த் பானு பிரகாஷ் சோனியா போஸ் சிவகுமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படத்தொகுப்பு ரூபன் இசை கிருஷ். பாடியவர் நிருத்திரியா பிள்ளை. இந்தத் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது, வரவேற்பையும் பெற்றுள்ளது.

English summary
Actress Sripriya has come up with a short film named Yasodha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X