Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறி அழுத குணசேகரன்... கெத்தாக நிற்கும் ஜனனி.. இனி தான் எதிர்நீச்சல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

வந்த வேகத்திலேயே வீட்டை விட்டு வெளியே நிற்கும் ஜனனியை பார்த்து முறைத்து கொண்டிருக்கிறார்.

சக்தி இப்போ தான் நீ சரியான வேலை செஞ்சிருக்கா என்று உள்ளே வந்ததும் சக்திக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார் ,குணசேகரன்.

மீண்டும் வீட்டிற்குள் குணசேகரன்

மீண்டும் வீட்டிற்குள் குணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சீரியல்களின் வரிசையில் இருந்து வருகிறது .இந்த சீரியலில் வில்லன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்துவை நடிக்க சொன்னால் கேரக்டராகவே மாறிவிட்டார் என்று பார்ப்பவர்கள் எல்லாம் குணசேகரனை திட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சீண் கிரியேட் பண்ணி, நெட்டிசன்களின் கலாய்களை வாங்கி வருகிறார். ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றாமல் நான் அந்த வீட்டிற்குள் வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த குணசேகரன் தற்போது மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

வீட்டிற்கு வெளியே ஜனனி

வீட்டிற்கு வெளியே ஜனனி

தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்த குணசேகரன் தன்னுடைய புது வீட்டின் வாசலில் வரை வந்து உள்ளே வராமல் நேற்றைய எபிசோடில் சீன் போட்டுக் கொண்டிருந்தார். இவரை அவருடைய தம்பிகள் தங்கை என அனைவரும் சமாதானப்படுத்தி வீட்டிற்குள்ளே அழைத்து வந்தனர். அங்கே ஜனனியை வீட்டை விட்டு வெளியே சக்தி நிற்க வைத்து இருக்கிறார். பள்ளி குழந்தை போல வீட்டை விட்டு மரத்தடியில் கைகளை கட்டிக் கொண்டு ஜனனி நிற்பதை பார்த்த குணசேகரனுக்கு மனதிற்குள்ளே சந்தோஷத்தோடு ஜனனியின் சபதத்தில் வென்று விட்ட மகிழ்ச்சியோடு முறைத்துக் கொண்டே வீட்டிற்குள் செல்கிறார்.

மீண்டும் வந்த அம்மா

மீண்டும் வந்த அம்மா

வீட்டிற்குள் வந்ததும் வழக்கமான அவருடைய அழுகாச்சி சீன்களை அனல் பறக்க காட்டிவிட்டு, தன்னுடைய தம்பி என்ன சக்தி இப்போது தான் சரியான முடிவு எடுத்திருப்பதாகவும் இந்த முடிவில் இருந்து பின்வாங்க கூடாது என்றும் அந்த மெட்ராஸ் காரி கூட சேர்ந்து சேர்ந்து ரொம்ப கெட்டுப் போயிட்டா என்று தன்னுடைய மனைவியான ஈஸ்வரியை திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஊருக்கு சென்றிருந்த குணசேகரனின் அம்மா வீட்டிற்கு திரும்பி வருகிறார். அம்மா இல்லையே என்று ஒரு சில எபிசோடுக்கு முன்பு குணசேகரன் கதரி அழுதது பார்ப்பவரை ஃபீல் பண்ண தான் செய்திருந்தது. இந்த நிலையில் அவருடைய அம்மா மீண்டும் வந்து விட்டதால் இனி என்ன ஆட்டம் ஆடப்போகிறாரோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

ஜனனியை பாராட்டும் ரசிகர்கள்

ஜனனியை பாராட்டும் ரசிகர்கள்

வீட்டிற்குள் வந்ததும் குணசேகரனின் அம்மா அப்படி என்னதான் பா நடந்து போச்சி? என்று கேட்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் மீண்டும் முதலில் இருந்தா? என்று சொல்லும் வகையில் தான் இருக்கிறது. இனி குணசேகரனின் அம்மாவுக்கு நடந்த கதை எல்லாம் விலக்கி நீ இல்லாததால் தான் அம்மா இந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் ஆடத் தொடங்கி விட்டார்கள். அதனால் இனி நீ வீட்டை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என்று அன்பு கட்டளை போட்டு குணசேகரன் அம்மாவையும் ஆட்டி வைக்க போகிறார் போல. அதோடு ஜனனி வேலைக்கு சென்ற செய்தியை கேட்டு இனி ஜனனியின் மாமியார் எடுக்கப் போகும் முடிவு என்னவென்று ரசிகர்களுக்கு குழப்பமாக இருந்தாலும் ஜனனி கெத்தாக ஹேண்ட் பேக் போட்டு கொண்டு வந்து நிற்பதை பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+