எதிர்நீச்சலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம்.. குந்தவையின் திடீர் மாற்றத்தால்...மாறிப்போன கதைக்களம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி குந்தவை குணசேகரனை எதிர்த்து பேசி இருக்கிறார்.
சக்தி மற்றும் குந்தவையின் திருமணம் கடைசி நேரத்தில் வந்து ஜனனி பேசியதால் நின்று விட்டது.
சக்தியின் முதல் திருமணத்தை பற்றியும் குடும்பத்தை பற்றியும் எதுவும் சொல்லவில்லையே என குந்தவை மொத்த குடும்பத்தையும் லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நேரத்தில் ஜனனி செய்த செயல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் விஜய் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இந்த சீரியலில் எபிசோடுகள் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பை கூட்டி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடு மத்தியில் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் சக்தி மற்றும் குந்தவையின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஜனனி கடைசி நேரத்தில் கோவிலுக்குள் வந்து விட்டதால் இனி என்ன நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று குந்தவை நடந்த விதம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதுதான் உண்மை
சக்தி குந்தகையின் கழுத்தில் தாலி கட்ட இருந்த கடைசி நேரத்தில் ஜனனி வந்து தனக்கும் சக்திக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்பதையும், இந்த வீட்டில் ஏற்கனவே இருக்கும் மூன்று பெண்களும் படித்த பெண்களாக இருந்தாலும் வீட்டில் அடிமையாக இருப்பதை குறித்தும், உன்னையும் அதுபோல வைத்துக் கொள்வதற்காக தான் திருமணம் செய்து கொள்கின்றனர் என்பதை பற்றி கோவிலில் அனைத்து உண்மைகளையும் குந்தவையிடம் குடும்பத்தினர் அனைவரும் முன்னிலையில் கூறிவிட்டார்.

இனி இந்த வாழ்க்கையே வேண்டாம்
கடைசி நேரத்தில் ஜனனி கோவிலுக்குள் வந்ததும் திருமணத்தை நிறுத்திவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சினாலும், தான் இனி இந்த ஒரு கஷ்டமான வாழ்க்கையில் வாழப் போவதில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். அதுபோல தன்னிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு அவர்கள் என்ன வேணாலும் செய்யலாம் என்றும் ஜனனி கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஜனனியின் திடீர் வருகையால் சக்தி ஒரு நிமிடம் ஆடிப் போனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் குந்தவை ஜனனி பேசியதை நினைத்துக் கொண்டு அதிர்ச்சியாக இருத்து வருகிறார்.

குந்தவை எடுத்த சூப்பர் முடிவு
திருமணத்திற்கு பிறகு குந்தவை இந்த குடும்பத்தை ஆட்டி படைப்பாளா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் .அது போல ஒரு வேளை குத்தவையயும் இந்த வீட்டு அடிமையாக மாற்றிக் கொள்வார்களோ என்றும் சிலர் பயந்து வந்தனர். ஆனால் தற்போது குந்தவை அமைதியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது குணசேகரன், குந்தவை நீ வா வந்து தாலி கட்டிக்க என்று கூப்பிடும்போது, நிறுத்துங்க உண்மையான ஆம்பளையா இருந்தா? எல்லாத்தையும் சொல்லி இருக்க வேண்டியது தான? எவ்வளவு அசிங்கமான மனசு இருக்கிற உங்க கால்ல விழுந்து இல்ல....என்று பேசவும் கதிரவன் வணக்கம் போல என்ன பேசிக்கிட்டே இருக்க விட்டா..? என்று குரலை உயர்த்திக்கொண்டு குந்தவையின் அருகில் வருகிறார். கதிரை பார்த்து வாயை மூடுங்க என்று கையை தூக்கி குந்தவை கோபத்தோடு பேசியதோடு இன்றைய ப்ரோமோ முடிந்து இருக்கிறது. குணசேகரனுக்கு சரியான பதிலடியை குந்தவை கொடுத்து விட்டார் என்று ரசிகர்கள் பலரும் இந்தப் ப்ரோமோவை பாராட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications