பார்த்தாலே பீபி ஏறுதே...இந்த மாதிரி எல்லாம் டாஸ்க் எங்க இருந்துதான் கண்டுபிடிக்கிறார்களோ??
சென்னை: போராடி ஜெயித்த வேடர்கள், ஜெயிக்க துடிக்கும் காடர்களின் போராட்டத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்.
சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய டாஸ்க் செய்வதற்கு நேற்றையே ரெடியான போட்டியாளர்கள் எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கிறது.
போட்டிகள் எல்லாமே வேற லெவல் தான் இருக்கிறது என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால் சமூக வலைத்தளங்கள் அல்லல் படுகிறது.

வெறித்தனமான டாஸ்க்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவை பார்த்து போட்டியாளர்கள் மட்டும் திகைத்து விடவில்லை ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு டாஸ்க்கும் வேற மாதிரிதான் இருந்து வருகிறது. ஆனாலும் அதை நாங்கள் விடமாட்டோம் என்று போட்டியாளர்களும் தங்களுடைய முழு திறமையையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் இதுவரைக்கும் தொடர்ந்து வெற்றி பெற்ற வேடர்களை எப்படியும் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று காடர்கள் முழு முயற்சியில் இறங்கி இருப்பதை பார்த்ததும் ரசிகர்களுக்கும் செம என்டர்டைன்மென்ட் இருக்கிறது என்று இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

போட்டிகள் பயங்கரம் தான்
அதுவும் இன்று இரவு இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் ஒட்டிக்கொண்டது. அதற்குக் காரணம் இரண்டாவது ப்ரோமோ தான் இந்த வார ரிவார்ட் யார் பெறுவார் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் காத்திருக்கும் போது போட்டியாளர்கள் தங்களுடைய முழு திறமையையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எந்த வலிகளையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் போட்டிபோடும் அழகைப் பார்த்து ரசிகர்கள் போட்டி என்றால் இதுதான் போட்டி என்று ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பலவிதமான ரசிகர்கள் பலவிதமாக கமெண்டுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

போட்டியில் விவேகமும் இருக்கு
அமைதியின் சொரூபமாக விளையாட்டுப் பிள்ளைகள் போல இருந்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள், போட்டி என்று வந்ததும் எங்கிருந்துதான் இவர்களுக்கு இந்த வேகம் வருகிறதோ தெரியவில்லை. அந்த அளவிற்கு போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபித்து வருகிறார்கள். இதில் யாருக்கு சப்போர்ட் செய்வது யாரை குறை கூறுவது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அனைவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர். அதுவும் குழுவாக சேர்ந்து வேலை செய்யும் இடங்களில் சில நேரங்களில் இவர்களுக்குள் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்பட்டு விட்டாலும் கூட டாஸ்க் என்று வரும்போது வெறித்தனமான வேங்கையாக மாறிவிடுகிறார்கள்.

வெற்றி யாருக்கு
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இது பிக்பாஸ் போன்று இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், இது எந்த நிகழ்ச்சியைப் போன்றுமில்லை புதுமையானது என்று ஒவ்வொரு போட்டியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்களும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இதுவரைக்கும் நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் வேடர்கள் அணி வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் காடர்கள் ஜெயித்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமாக கூறிவருகின்றனர். யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு இந்த வாரம் என்ன ரிவார்டு கிடைக்கப் போகிறது என்பதை பார்ப்பதிலும் கொஞ்சம் ஆர்வத்தில் தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications