என்னை வேற மாதிரி பயன்படுத்தினால் நான் சூறாவளி... கெத்து காட்டிய ராஜு
சென்னை: இவ்வளவு நாளா அமைதியாக இருந்த ராஜூ இப்போ ஆக்ரோஷத்தை காட்டியிருக்கிறார்.
இவருக்குக் கோபம் வருமா என்று கேள்வி கேட்டிருந்த போட்டியாளர்கள் தற்போது இவருடைய பேச்சை கேட்டதும் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கின்றனர்.
அடடா நம்ம தல ஃபாம்க்கு வந்துவிட்டார் என்று ராஜுவின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கத்தி கேரக்டர்
சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ராஜு இவருடைய பெயரே தெரியாத வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். அது போலத்தான் இவரை பல இடங்களிலும் ரசிகர்கள் அழைத்து வந்தனர். இந்த சீரியலின் விறுவிறுப்புக்கும் காமெடிக்கும் இவரும் காரணம். அதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த அந்த குணம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் இவர் காலடி எடுத்து வைத்திருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து இவர் எந்த பிரச்சனைகளிலும் அவ்வளவாக தலையிடாமல் ஓரமாக இருந்து அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கருத்தை சொல்ல வேண்டிய இடத்தில் ஆணித்தரமாக சொல்லி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பையும் பெற்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இவருக்கு என்று இப்போது ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். காரணம் இவருடைய தைரியமான பேச்சும் எதற்கும் வளைந்து கொடுக்காமல் இருக்கும் குணமும் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த கண்ணு தான் பேசுது
ஆரம்பத்தில் இவர் அபிஷேக், பிரியங்கா, நிரூப் அனைவரும் ஒரு அணியினர் போலத்தான் இருந்து வந்தனர். ஆனால் அவர்களில் அபிஷேக், பிரியங்கா செய்யும் செயல் இவருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் அவர்களிடம் அந்த அளவிற்கு பிடிகொடுக்காமல் பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அபிஷேக்குக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் இருந்து வருகின்றனர். அவர் செய்யும் செயல்களை கலாய்த்து வருவதே ரசிகர்களுக்கு பெரிய வேலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர்கள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும், மழுப்பினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முகத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

என்ன வார்த்தை சொல்லிட்டீங்க
நேற்றைய எபிசோட்டில் பிக் பாஸ் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் பூதங்களில் எது தங்களுக்குள் இருக்கிறது என்றும் இந்த வீட்டிற்குள் இருக்கும் பிற போட்டியாளர்களின் குறையாக எதை நினைக்கிறீர்கள் என்றும் கேட்டிருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும்போது ராஜு, தன்னை காற்றோடு ஒப்பிட்டு இருக்கிறார். நான் இல்லாமல் யாராலயும் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் நான் கோபப்பட்டால் யாராலயும் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் என்னை கோபப்படுத்தி பார்க்க நினைக்காதீர்கள். என்னை வேற மாதிரி பயன்படுத்தினால் நான் சூறாவளி என்று கெத்தாக இவர் பேசிய வார்த்தைகளை கேட்டதும் சக போட்டியாளர்களுக்கு அள்ளு விட்டிருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications