பக்கம் பக்கமாக வசனம் பேசும் அபிஷேக்... கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்
சென்னை: கம்பிக் கட்டுற கதைகள் எல்லாம் சொல்றாங்க என்று இப்போ அபிஷேக்கை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்கள் இடம் இவர் நடத்தும் நாரதர் வேலை வேற லெவல் என்று மீம்ஸ்கள் பறந்து வருகிறது.
என்ன என்ன காரியம் பண்ணினால் ப்ரமோவில் வரலாம் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் அபிஷேக் என்று நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

காரணம் அபிஷேக் தான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதுபோல தற்போது 5வது சீசனில் அந்த இடத்தை பிடித்திருப்பது அபிஷேக் தான் இவர் என்ன பண்ணினாலும் இவரை கலாய்ப்பதற்காகவும் ஒரு கூட்டம் சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. என்னதான் இவர் செய்து கொண்டிருந்தாலும் இவர் செய்யும் செயல்கள் தான் அதிகமாக ப்ரமோக்களில் வந்து பரபரப்பை கூட்டிவருகிறது. நிகழ்ச்சிக்கு இவர் ஒருவர் மட்டும்தான் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இது யாராலயும் முடியாது
அபிஷேக்கால் தான் இந்த ஐந்தாவது சீசன் ரசிகர்களையும், நெகட்டிவர்ஸ்களையும் எதிர் பார்க்க வைத்திருக்கிறது என்று ஒருபக்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அதனால்தான் போனவாரம் எலிமினேஷனில் இவருடைய பெயர் கடைசியில் இருந்தாலும் இவர் வெளியேறவில்லை என்று இவரை பிடிக்காத ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் போட்டியாளர்கள் பலர் தங்களுடைய பெயர் கெட்டுப் போய்விடக் கூடாது என்று பொய்யான முகத்தை திரையில் நடித்துக் கொண்டிருக்கும் போது, இவர் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை நான் எப்படியும் ப்ரமோவில் வந்துவிட வேண்டும் அது ஒன்றே எனக்குப் போதும் என்று வெறித்தனமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

வேற லெவல் சிந்தனை
அபிஷேக்கின் ஸ்சாட்டர்ஜி புரிந்து கொண்டது ரசிகர்கள் மட்டுமல்ல போட்டியாளர்களும் தான். அதனால் தான் இவரிடம் இருந்து விலகி இருக்கவே பலர் நினைத்து வருகின்றனர். ஆனால் இவருடன் பிரியங்காவும், நிரூப் மட்டும் ரொம்பவே உரிமையுடனும், பாசமாகவும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வருகிறார்கள். இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு கடுப்பை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அப்படி செய்யாதீர்கள் என்று பலர் பிரியங்காவுக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர். ஆனால் ப்ரியங்கா அதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. எப்படியும் நம்ம பாப்புலர் ஆனால் சரி என்று நினைத்துவிட்டார் போல, என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

என்டர்டைன்மென்ட் சீன்
இந்த வார டாஸ்க்கில் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காயின்களை சேகரித்துக் கொள்ள பிக் பாஸ் ஒரு டாஸ்க்கு வைத்திருக்கிறது. அதில் எப்படியாவது தான் சேவ் ஆகி விட வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளர்கள் இடம் தினுசு தினுசாக கதை அளந்து கொண்டு இருக்கிறார். இவர் பேசுவதை கண்டு கொள்ளாமல் போட்டியாளர்களும் இப்போது இருக்கப் பழகி விட்டனர். ஆனால் இவர் விட்டபாடில்லை. இன்றைய ப்ரமோவில் இவர் போட்டியாளர்களின் மனசை மாற்றி அவர்களுக்குள் சண்டை இழுத்து விடுவதற்காக சிண்டு முடித்து கொண்டிருக்கிறார். பக்கம் பக்கமாக இவர் பேசும் வசனத்தை கண்டுகொள்ளாத பாவனி ரெட்டி மற்றும் சுருதி இடம் இவர் ஓடி ஓடி பேசிக்கொண்டிருப்பது ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட்டாக இருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications