Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறும் பார்வதி...பதறும் ரசிகர்கள்...என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியிலும் இப்படி பண்ணுகிறார்களே!! என்னை தனியா ஒதிக்கிட்டாங்க என்று பார்வதி கதறுகிறார்.

நான் தலைவராக இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று கூறிய ஒற்றை வார்த்தையால் கும்பலாக அனைவரும் சேர்ந்து பார்வதிக்கு பக்குவமாய் பாடம் நடத்தி விட்டார்கள்.

கேமரா முன்னாடி எல்லாரும் நடிக்கிறாங்க, என்று மூன்றாம் உலகத்துக்கு போனாலும் மூச்சுமுட்ட பேசிக்கொண்டிருக்கும் பார்வதியை மூச்சு விடாமல் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.

மிரட்டும் சாகசங்கள்

மிரட்டும் சாகசங்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி சாகசங்கள் செய்யும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது சாகசங்கள் மட்டுமல்லாமல் சண்டைகளும் நிறைந்திருந்த நிகழ்ச்சி தான் என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ரியாலிட்டி ஷோ வாக இந்த சேனலில் முதல்முறையாக ஒளிபரப்பாகி வந்தாலும் ஒளிபரப்பான முதல்நாள் எபிசோடில் இருந்து இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகரித்துதான் கொண்டிருக்கின்றனர்.

மூன்றாம் உலகத்தில் பார்வதி

மூன்றாம் உலகத்தில் பார்வதி

இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு வரைக்கும் இது பிக்பாஸ் போன்றுதான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, முதல்நாள் டாஸ்க் மிரட்டி விட்டது. இப்படியெல்லாம் கூட போட்டிகள் இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் எல்லாம்

கூறி வருகின்றனர். ஆனால் என்னதான் இவர்கள் மிரட்டி கொண்டிருந்தாலும் அங்கிருக்கும் போட்டியாளர்கள் நாங்கள் ஒருபக்கமாக போட்டி போடுகிறோம் என்று ஏடாகூடமாக பேசிவருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் தற்போது அதில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இரண்டு போட்டியாளர்கள் மூன்றாம் உலகத்தில் இருந்து வந்த நிலையில் மூன்றாவதாக பார்வதியையும் நேற்று இந்த மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

பதறும் ரசிகர்கள்

பதறும் ரசிகர்கள்

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து இப்ப வரைக்கும் பார்வதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒருபுறம் என்றால் நெகட்டிவ் கமெண்டுகளை கொடுக்கும் நெகட்டிவர்ஸ் பெரிய அளவில் கலாய்த்து வருகின்றனர். இவர் போடும் ஆடையில் தொடங்கி இவர் பேசும் வார்த்தைகள் வரைக்கும் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மீம்ஸ்களாலே பலர் பிரபலம் அடைந்து விடுகின்றனர். அந்த வகையில் பார்வதியும் தற்போது சேர்ந்திருக்கிறார். இவர் ஒரு விஜே வாக இருந்து தெருவில் இறங்கி மக்களுடன் நேரடியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபலமடைந்து இருக்கிறார். இவருடைய கேள்விகள் எல்லாமே எடக்கு மடக்காக இருப்பதால் பலர் இவர் மைக்கை தூக்கி கொண்டு வருவதைப் பார்த்ததும் பல மைல் தூரம் ஓடி போய் விடுவார்கள்.

மீம்ஸ்களில் பார்வதி முகம்தான்

மீம்ஸ்களில் பார்வதி முகம்தான்

இந்த நிகழ்ச்சியில் விஜே பார்வதி கலந்து கொள்கிறார் என்று சொன்னபோதே பல ரசிகர்கள் அப்போ இங்கே பஞ்சாயத்துக்கு பஞ்சமிருக்காது என்று தான் கூறி வந்தனர்.மைக் கூட தேவையில்லை அனைவரையும் வார்த்தைகளால் பந்த் ஆக்கிவிடுவார் என்று கூறியது போல தான் தற்போது இந்த நிகழ்ச்சியிலும் இவர் செய்து கொண்டிருக்கிறார். நேற்றைய போட்டியில் இவருடைய அணி தோற்று விட்டதற்காக பஞ்சாயத்துக்கு அர்ஜுனிடம் சென்ற இவர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கும் போது விஜே பார்வதி பேசியதுதான் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. போட்டியாளர்களையும் முகம் சுளிக்க வைத்து கோபப்பட வைத்து விட்டதால் இவர் இந்த மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கே போனாலும் இவருடைய அணியினரை பற்றி இவர் இன்று பேசிய ப்ரோமோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது ப்ரோமோவை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+