
கைகளில் மருதாணி, முகத்தில் வெட்கம்...காரணம் என்ன??தர்ஷாவை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: வெட்கத்தை சிந்தியபடி தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக மாறினாலும் சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார்.
தர்ஷா குப்தா வீடியோ வெளியிட்ட சிறிது நேரத்திற்குள் ஹார்ட்டின்கள் பறந்து வருகிறது.
6 ஆண்டுகளில் இல்லாத மழை.. நிவாரண பணிகளில் உடனடியாக ஈடுபடுக.. பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்

அதிகரிக்கும் ரசிகர்கள்
சின்னத்திரை சீரியலின் மூலமாக சினிமாக்களில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் காலடி தடம் பதித்திருக்கும் தர்ஷாவிற்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகத்தான் இருந்து வருகிறது. அதுவும் சமூக வலைத்தளத்தில் கேட்கவே வேண்டாம். நாளுக்குநாள் இவருடைய ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதிகரிக்கும் ரசிகர்களால் இவருடைய பெயரில் பல பேன்ஸ் பேஜ்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

சீரியலில் அறிமுகம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்த இவர் முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் அதற்கு பிறகு நடித்த சீரியல்களில் வில்லியாக மிரட்டிவிட்டார். இவருடைய மிரட்டலான நடிப்பை பார்த்து ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் சமூக வலைத்தளத்தில் இவருடைய ஆக்டிவ் பார்த்ததும் அசந்து போய் விட்டார்கள். அதுவும் டிக் டாக் இருந்த காலகட்டத்தில் இவர் பாவாடை தாவணி முதல் மாடர்ன் உடை வரை அனைத்திலம் தன்னுடைய அழகையும் திறமையும் காட்டி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி விட்டார்.

குக் வித் கோமாளியில் பிரபலம்
சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் மேலும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். தன்னுடைய நடிப்புத் திறமை மட்டுமல்லாமல் நகைச்சுவை திறமையையும் இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் புகழடன் சேர்ந்து செய்யும் கலக்கலான காமெடிகள் மற்றும் சமையல் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்தது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் பாதியிலேயே வெளியேறி விட்டாலும் ரசிகர்களின் மனதில் நன்றாக பதிந்து விட்டார்.

வைரலான ரீல்ஸ் வீடியோ
சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் போதே இவர் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது திரைப்படங்களின் வாய்ப்புக்காக சின்னத்திரையில் இருந்து விலகிவிட்டார். ஆனாலும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி வெளியிடும் போட்டோ ஷூட் போட்டோஸ்கள் ரீல்ஸ் வீடியோக்களும் வைரல் ஆகி விடும். அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. கைகளில் செக்கச்செவேலென்று மருதாணி வைத்துக் கொண்டு, முகத்தில் வெட்கத்தோடு இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோஸ் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.