ஆண்கள் அடிச்சிக்கிறாங்க...பெண்கள் கூடிக்கிறாங்க...கலைக்கட்டும் பிக் பாஸ் ப்ரோமோ
சென்னை: இன்றைய பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் ஆண்கள் அணியினர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video
ஆண் போட்டியாளர்களை பார்த்ததும் ரசிகர்கள் அப்போ இன்னைக்கு சம்பவம் இருக்கு என்று ஆர்வத்தில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
மற்றொரு பக்கம் பெண் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாகவும் அனுசரணையாகவும் மோட்டிவேஷனலை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சனை ஆரம்பம் ஆகிடுச்சி
அய்யோ இப்பவே கண்ண கட்டுதே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிற மாதிரி தான் தற்போது மூன்றாவது நாள் எபிசோட்டின் ப்ரோமோ ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது. இது உண்மையிலே போட்டியாளர்களுக்குள் இப்படி நடக்கிறதா? அல்லது இது எல்லாமே கண்டன்தானா என்று ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் தான் இருந்து வருகின்றனர். நேற்று வரைக்கும் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தவர்கள். இன்று போர்க் கொடியை தூக்கி கருத்து. வேறுபாடுகளை காட்டிவிட்டார்கள்.

சமூக வலைத்தளத்தில் வைரல்
எப்போதுமே ப்ரோமோவில் காட்டுவது எபிசோட்டில் இருக்காது ப்ரோமோ வில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்ட சில நிகழ்வுகள் கூட எபிசோடில் சப்பென்று ஆகி விடும். அதே போலத்தான் இன்றைய ப்ரோமோ இருக்குமா அல்லது உண்மையிலேயே இன்றைக்கு சம்பவம் இருக்கா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவைப் பற்றி தான் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கதை டாஸ்க்
மூன்றாவது நாளான இன்று,நேற்று தொடங்கிய டாஸ்க் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. டாக்ஸ்காக தங்களுடைய கடந்து வந்த கடினமான கதைகளை கூற சொல்லியிருக்கின்றனர். இந்தநிலையில் நேற்று தொடங்கிய அழுகை கதைகள் இந்த வாரம் முழுக்க தொடர்ந்து விடும் போல, நேற்றைக்கு இருவர்தான் தங்களுடைய கதைகளை கூறியிருக்கிறார்கள். அதை கேட்டதும் பாதிப்பேர் ஆறுதல் கூற, என பிக் பாஸ் கதைகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போ சண்டை இருக்கு
நேற்றைக்கு தொடங்கிய அதே கதை இன்றும் தொடர்வது போல இமான் அண்ணாச்சி தன்னுடைய கதையை கூறி கொண்டு இருக்கிறார். கடைசியாக அதனால்தான் நான் காமெடி நடிகர் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்று தனக்கே உரிய நகைச்சுவையோடு அவர் எதர்த்தமாக பேச அதை தவறாக புரிந்துகொண்ட போட்டியாளர்களுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டு விட்டது. இது உண்மையில் நடக்கிறதா அல்லது எடிட்டரின் வேலையா என்று நெட்டிசன்கள் பலர் இதைப் பார்த்து கேட்டுக்கொண்டு வருகின்றனர். அதுவும் ஒருவருக்கு ஒருவர் கத்திப் பேசுவதை பார்த்ததும் இன்னைக்கு செமயான சண்டை இருக்கிறது என்று ரசிகர்கள் கூட்டம் ஆவலாக காத்திருக்கிறது.

செம அட்வைஸ்
அடுத்த ப்ரோமோவில் சுருதி தனது வாழ்க்கையில் நடந்த சோகங்களை ஐக்கி மற்றும் இசைவாணியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதில் நான் அழவே கூடாதுன்னு நினைச்சேன் என்று சுருதி கூறவும் அதற்கு ஆறுதல் கூறும் விதமாக அழனுன்னு தோணுச்சுன்னா அழு என்று கூறுகிறார். இந்த அழுகை நான் என்னை ஸ்ட்ராங்காக மாற்றி இருக்கிறது .எனக்கு அழனும் என்று தோன்றும் போது நான் அழுவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு இசைவாணியும் நம்மளை ஒதுக்குறாங்கன்னா...அவங்க நம்மளை செதுக்குறாங்க என்று அர்த்தம் என்று எதுகை மோனையில் சும்மா பட்டையை கிளப்பியிருக்கிறார்.

நிறத்தால் புறக்கணிப்பு
அதுமட்டுமல்லாமல் தான் ஒரு மாடலாக இருப்பதால் கலரை வைத்து நிறைய இடங்களில் கஷ்டங்களை பட்டிருப்பதாகவும், தன்னை ஒதுக்கியவர்களை உதறியதாகவும் கூறியிருக்கிறார். ஒருவரை நிறத்தால் ஒதுக்குவதும், அவருடைய திறமையை மதிக்காமல் புறக்கணிக்கப்படுவதும் இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று இவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கமெண்ட்களை அனுப்பி வருகின்றனர். ஆனாலும் ஒரு பக்கம் ஆண்கள் அணியினர் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது, மறுபக்கம் பெண்கள் அணியினர் ஆறுதலாக இருப்பது இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications