வேடர்களை கலாய்க்கும் காடர்கள்.. அங்க இருக்கிற நிலவரம் தெரியாமல் இப்படி பேசலாமா??ரசிகர்கள் கலாய்ப்பு
சென்னை: பக்கத்துல இருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த இடத்தில் என்ன பிரச்சனை இருக்கு என்று, என்பதை காடர்கள் புரியாமல் வேடர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காடர்களால் ஜெயிக்க முடியாததை வேடர்கள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்கள் என்று தீவிரமான ஆலோசனை மீட்டிங் காடர்களால் போடப்பட்டுள்ளது.
என்னதான் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அடுத்தவர்களை பற்றி பேசும்போது அனைவரும் ஒன்றுகூடி ரைமிங்கில் கலாய்க்கிறார்களேப்பா.

வெறித்தனமான டாஸ்க்
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்ப தொடங்கி ஒரு வாரங்களை முடிவடைந்து இருந்தாலும் இதில் பல டாஸ்க்கள் முடிவடைந்து இருந்தாலும் அதில் இதுவரைக்கும் காடர்கள் டீம் எந்த டாஸ்க்களையும் ஜெயிக்கவில்லை. இது அந்த டீமில் இருக்கும் போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் போட்டியில் ஜெயிக்க வில்லை என்றாலும் இவர்கள் அனைவரும் ரசிகர்களின் மனதில் வென்று வருகிறார்கள். இவர்களுக்குள் சில நேரங்களில் சண்டைகள் வந்து கொண்டிருந்தாலும் அதையும் தூக்கி போட்டுவிட்டு ஒன்றாக சேர்ந்து ஜாலியாக என்டர்டைன்மென்ட் செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்க்கும் போது இவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வந்தார்களா??அல்லது சுற்றி பார்க்க வந்தார்களா என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

மனதை வென்ற ஸ்ருஷ்டி
வேடர்கள் டீமில் லட்சுமி பிரியா, அஜ்மல்கான், நந்தா, லக்கி நாராயணன், பெசன்ட் ரவிவருகின்றனர், விஜே பார்வதி போன்றோர் இருந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் டீமில் இருந்த ஸ்ருஷ்டி டாங்கே எலிமினேஷன் ஆகி நேற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதும் அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக தான் இருந்தது. ஆனால் அவர் எலிமினேஷன் ஆகி வீட்டிற்கு செல்லும் நேரத்தில் உன் கூட அவருடைய முகத்தில் அந்தச் சிரிப்பு மாறவில்லையே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர். இதற்காகவே இவர் கூட கொஞ்ச நாள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வந்தால் நன்றாக இருக்கும் என்றும், வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த தலைவர் யார்
வேடர்கள் டீமில் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. நானே தலைவராக இருக்கிறேன் என்று விஜே பார்வதி கூற அவர் இருந்தால் நமக்கு செட்டாகாது என்று அனைவரும் கூடி பேசி வருகின்றனர். இந்த ப்ரோமோ வைரலாகி வரும் நிலையில் இங்கே நடக்கும் கலவரம் தெரியாமல் இவர்களைப்பற்றி காடர்களின் டீம், வேடர்கள் உண்மையிலேயே சண்டை போடுகிறார்களா அல்லது சண்டை போடுவது போல நடித்துக்கொண்டு இருக்கிறார்களா??ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம் என பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர்கள் ஒற்றுமையாய் இருப்பதால் தான் அவர்களால் போட்டியில் எல்லாம் வெற்றி பெற முடிகிறது என்றும் கூறிவருகின்றனர்.

உண்மை தெரியாமல் பேசாதீர்கள்
அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்ராந்த், பெசண்ட் ரவியை கடத்திக் கொண்டு வர வேண்டும், அவரை தலைகீழாக தொங்கவிட்டு உலுப்பினால் உண்மைகளை எல்லாம் சொல்லி விடுவார் என்று கலாய்த்து வருகிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சையாக தான் தெரியும் என்று சொல்வது உண்மைதான் போல. அங்கே சென்று பார்த்தால் தான் தெரியும் அங்கே என்ன மாதிரி நிலவரம் என்பது இவர்கள் விஷயத்தில் உண்மைதான் என்று நம்பத் தோன்றுகிறது. காடர்களை போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என்றுதான் விடாமுயற்சியோடு ஒவ்வொரு முறையும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்க்கும்போது இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இந்த இரண்டு அணியுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு இருந்தாலும் இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று கூற முடியாமல் தான் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications