Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ரோமோவில் அப்படி காட்டிவிட்டு... எபிசோட்டில் இப்படியா?? பிக்பாஸை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்வத்தோடு பிக் பாஸ் பார்க்க காத்திருந்தவர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

எல்லோரையும் பார்க்க வைப்பதற்காக இந்த மாதிரி எல்லாம் ப்ரோமோவில் போட்டு ரசிகர்களை ஏமாற்றுகிறீர்களா என பலர் கொதித்தெழுந்து வருகின்றனர்.

ஆனாலும் அண்ணாச்சி இந்த மாதிரி ஆக்டிங் போடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

ஆர்வத்தை அதிகரித்த ப்ரோமோ

ஆர்வத்தை அதிகரித்த ப்ரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது இரண்டு வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் நேற்றைய ப்ரோமோக்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்தது. அதுவும் சண்டை சச்சரவுகள் பஞ்சம் இல்லாமல் இருந்ததால் நிகழ்ச்சி இப்ப தான் சூடு பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் பலர் நிகழ்ச்சிக்கு கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது எல்லாமே நடிப்பு என்பது நிகழ்ச்சியில்தான் தெரிந்திருக்கிறது.

இப்படி பண்ணிட்டீங்களே

இப்படி பண்ணிட்டீங்களே

தலைவர் பதவிக்கு போட்டி போடுபவர்களை ஏமாற்றி உணர்ச்சிகளை தூண்டுவதற்காக ரசிகர்களின் உணர்ச்சியில் விளையாடியிருக்கிறார்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள். நேற்றைய பிக் பாஸ் எபிசோட் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ப்ரோமோவில் அபிஷேக் போட்ட ஆட்டம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது. என்னடா இப்படி பண்ணுறாங்க என்று பலர் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இது அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சப்பென்று ஆகி விட்டார்கள்.

இந்த வார தலைவர் சிபி

இந்த வார தலைவர் சிபி

ஒருவழியாக கடைசியாக சிபி இந்த வார தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், தலைவர் பதவிக்கு நிற்கும் சக போட்டியாளர்களை இவர்கள் டாஸ்க் என்கிற பெயரில் செய்த செயல் பலருடைய முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன இருந்தாலும் டாஸ்க் என்றாலும் இப்படி தங்களுடைய சொந்த விஷயங்களை பேசி அடுத்தவர்களை அழ வைக்கலாமா?? அதுவும் கடந்தகால வேதனையை கூறி இப்படி டாஸ்கில் பயன்படுத்தலாமா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்காகத்தானே இந்த வீட்டிற்குள் வந்து இருக்கோம் அந்த வேலையை சிறப்பாக பார்ப்போம் என்று இப்போ பிக் பாஸ் போட்டியாளர்கள் நிரூபித்து வருகின்றனர்.

Recommended Video

    Priyanka Mohan-ஐ Doctor Pressmeet -ல் வெச்சி செய்த Sivakarthikeyan | Doctor, Nelson Dilipkumar
    டி ஆர் பி யில் பெரும் வளர்ச்சி

    டி ஆர் பி யில் பெரும் வளர்ச்சி

    ரசிகர்கள் ஒரு புறம் அபிஷேக் மீது காண்டாக இருக்கும் நேரத்தில் நேற்றைய எபிசோடு சப்பென்று ஆகி விட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது பலர் காண்டாகி இருக்கின்றனர். வரவர இந்த நிகழ்ச்சி இழுபறி போல இருக்கிறது என்றும் மொக்கையாக இருக்கிறது என்றும் பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னதான் ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும் நாளுக்கு நாள் இதற்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனாலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொரு நாளும் இதற்கு டிஆர்பி கூடிகொண்டிருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+