Thug Life: திரிஷாவுக்கு வந்த சோதனை.. “சுகர் பேபி” பாடலால் வந்த விமர்சனம்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் தான்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தில் த்ரிஷாவின் சுகர் பேபி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் இந்த வீடியோவில் த்ரிஷாவின் நடன அசைவுகளை பார்த்து ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அதில் பலர் த்ரிஷாவுக்கு நடிக்கவும் வரல, டான்ஸ் ஆடவும் வரல என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர் மணிரத்தினத்தின் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறது. அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "சுகர் பேபி" பாடலும் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல் வரிகள் முதல் த்ரிஷாவின் டான்ஸ் வரை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

சுகர் பேபி மேக்கிங் வீடியோ
சுகர் பேபி பாடலின் மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டரான ரோஷினி நாயர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதற்கு இப்போது த்ரிஷாவுக்கு எதிராக நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் வந்திருக்கிறது. ரோஷினி திரிஷாவுக்கு சுகர் பேபி பாடல் சொல்லிக் கொடுக்கும் வீடியோவை பகிர்ந்து டான்ஸ் இயக்குனர் கிருதி மகேஷ் டேக் செய்து, "வாழ்நாளில் கிடைக்கும் ஒரு சிறந்த அனுபவம் தக் லைஃப்" என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த பதிவில் கமெண்ட் செக்ஷனில் த்ரிஷாவின் ஹூக் ஸ்டெப் பற்றி பல கமெண்ட்கள் குவிந்து இருக்கிறது.
விமர்சனங்கள்
அதில் ஒரு ரசிகர், "த்ரிஷாவுக்கு டான்ஸ் ஆடவும் வரல, நடிப்பும் வரல" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். இன்னொரு ரசிகரும், "த்ரிஷாவுக்கு டான்ஸ் வரல" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த ரசிகர் ஒருவர், "த்ரிஷாவை விட கொரியோகிராபர் பேசியல் எக்ஸ்பிரஷன் சூப்பராக இருக்கிறது இந்த பாடலுக்கு அவரே டான்ஸ் ஆடி இருக்கலாம்" என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக இன்னொரு ரசிகர், "மோஸ்ட் ஓவரைட்டிங் ஹீரோயின், வித் ஜீரோ ஆக்டிங் அண்ட் டான்ஸ், அண்ட் டயலாக் டெலிவரி ஸ்கில் இருப்பது திரிஷா மற்றும் நயன்தாராவிற்கு தான்" என்று நயன்தாராவையும் இந்த பதிவில் வம்பு இழுத்து இருக்கிறார்.

ரசிகர்களின் கமெண்ட்
அதுபோல இன்னொரு ரசிகர், "இத்தனை வருஷமா என் மனசுல இருந்த விஷயத்தை கமெண்ட்ல சொல்லிட்டீங்க. திரிஷாவுக்கு ஜீரோ ஆக்டிங் ஜீரோ டான்ஸின், ஆனா இன்னும் சர்வே ஆகுகிறார்" என்று கூறியிருக்கிறார். இப்படியாக த்ரிஷாவின் டான்ஸை விமர்சித்து அதிகமான கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
த்ரிஷாவின் பதிவு
த்ரிஷாவின் லேட்டஸ்ட் பதிவில், "என்னை யாராவது ஏதாவது செய்ய வேண்டாம் என சொன்னால் அதை நான் இரண்டு முறை செய்வது மட்டுமல்லாமல், அந்த போட்டோக்களை வெளியிடுவேன்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆடியோ வெளியீட்டு விழாவில் த்ரிஷா கலந்துகொள்ளும் உடைகளில் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதான் தன்னைப் பற்றிய நெகடிவ்களுக்கு பதிலடி என்று அவருடைய ரசிகர்கள் திரிஷாவை பாராட்டி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications