விஜய் டிவியை விட்டு சன் டிவிக்கு போன காரணம்? ஜி.பி முத்து வீடியோவை பகிர்ந்து.. வெங்கடேஷ் பட் பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் அதிலிருந்து விலகி சன் டிவியில் "டாப் குக்கு டூப் குக்கு" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஜி.பி. முத்து வீடியோ ஒன்றில் விளக்கமளித்திருக்கிறார். அந்த வீடியோவை வெங்கடேஷ் பட் பகிர்ந்து ஜி.பி முத்துவை பாராட்டி இருக்கிறார்.
பொதுவாக ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த மாதிரிதான் விஜய் டிவியில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த ஐந்தாவது சீசன் தொடங்கப்படும் போதே பெரிய பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேசஷ் பட் திடீரென்று ஐந்தாவது சீசனில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் தயாரிப்பாளர் என்று தொடர்ச்சியாக ஐந்தாவது சீசனிலிருந்து விலகி இருந்தனர். இந்த நிலையில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது.
சன் டிவியா? விஜய் டிவியா? நடிகர் வடிவேலு இணையும் சமையல் நிகழ்ச்சி! அப்போ பஞ்சாயத்து இருக்கு
இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல குக் வித் கோமாளியில் நான்கு சீசன்களாக கலந்து கொண்ட பல கோமாளிகள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஜி.பி. முத்து, தீபா, மோனிஷா, பரத், தீனா, அதிர்ச்சி அருண் போன்றோர் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜி.பி முத்து வழக்கம் போல தன்னுடைய வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அப்போது அவரிடம் ரசிகர்கள் நீங்கள் எதற்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு போனீங்க என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு விளக்கம் அளித்து ஜிபி முத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இப்போ சன் டிவி நிகழ்ச்சியில் கூப்பிட்டாங்க அங்க போயிருக்கிறேன். நாளைக்கு விஜய் டிவியில் கூப்பிட்டா அங்க போக போறேன். எதற்காக நீங்க இப்படி பிரிச்சு பேசுறீங்கன்னு எனக்கு தெரியல... மீடியா மிஷன் நிறுவனம்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை முதலில் தயாரித்து இருக்காங்க. பிறகு அவங்க வெளியே வந்து இன்னொரு நிகழ்ச்சி தயாரிக்கிறாங்க.
அதில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இதில் என்ன தப்பு இருக்கு? இதில் ஏன் கலந்துக்குறீங்க? என்று எப்படி கேட்கலாம்... நான் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடுவர் எல்லாருமே அவர்களுக்கு எது சரின்னு படுதோ அதை தானே செய்வாங்க என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் பட் "ஹாஹா..ஹா.. ஜிபி.. எதற்காக இந்த கம்யூனிகேஷன். ஆனால் பங்கம் பண்ணிட்ட மேன்..." என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications