இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கவே இல்லை! இந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது!அபிஷன் ஜீவித் உருக்கம்
சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் ஹிட்டான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான அபிஷன் ஜீவித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நடந்த இன்ப அதிர்ச்சி குறித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த எதிர்பாராத அன்பை பார்த்து தான் நெகிழ்ந்து போனதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி அதிகமான மக்களால் பாராட்டப்படும் படங்களில் ஒன்றாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் பல மடங்கு லாபம் எடுத்த திரைப்படமாக இருக்கிறது. 24 வயதான ஒரு இளைஞர் இயக்குனர் ஆகி சாதித்திருக்கிறார். உதவி இயக்குனராக கூட தான் பணியாற்றியது இல்லை என்று சொன்ன அபிஷன் ஜீவித்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேச்சு இருந்து வருகிறது.

ரசிகர்களின் பாராட்டு
இவருடைய திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் சாதித்த பல பிரபலங்களும் இவருடைய படத்தை வியந்து பேசி வருகிறார்கள். எதார்த்தமான கதைகளத்தோடு மக்களை கவர்ந்து வரும் இந்த திரைப்படம் ஓடிடியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்து இயக்கியும் பெயர் வாங்கிய அபிஷன் ஜீவித் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அபிஷன் ஜீவித் இன்ஸ்டா பதிவு
அபிஷன் வெளியிட்ட பதிவில், "நான் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது ஒரு அண்ணா திடீரென்று யூடியூபில் "முகை மழை" பாடலை போட்டார். அவரிடம் நான் இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்குமா? என்று கேட்டதற்கு அவர் நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்தேன் என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் நான் தான் இந்த படத்தின் இயக்குனர் என்று அவரிடம் சொன்னபோது அவர் மகிழ்ச்சியில் மூழ்கி படத்தின் மீதான தனது அன்பை முழு மனதுடன் வெளிப்படுத்தினார்"
வெற்றி கூட்டணி
அதுபோல "உங்கள் சிறிய பங்களிப்பின் காரணமாக ஒருவர் புன்னகைக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும் போது அந்த மகிழ்ச்சியை உண்மையிலே அளவிட முடியாதது" என்று அந்த பதிவில் அபிஷன் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் உடன் நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.

மாறும் சிந்தனை
இந்த திரைப்படத்தின் மூலமாக சிம்ரனுக்கு கம்பேக் கிடைத்து இருக்கிறது. சசிகுமார் சமீப காலமாகவே நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்த படத்தை இயக்கி இன்று பலருடைய கவனிப்பை திசை திருப்பி இருக்கும் அபிஷன்க்கு பலரும் லைக் கொடுத்து வருகிறார்கள். அதுபோல பெரிய பட்ஜெட் படங்கள் தான் மக்கள் விரும்புவார்கள் என்ற மாயை இப்போது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சின்ன பட்ஜெட்டில் உருவாகும் கதையும் மக்கள் விரும்புவார்கள் என்று அபிஷன் உட்பட பல இயக்குனர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications