நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா?
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வரும் நிலையில், அதற்கு அவர் அளித்த பதிலும், தற்போது அவர் கவனம் செலுத்தி வரும் விஷயங்களும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

திரிஷாவை பற்றிய வதந்திகள்
சமீப காலமாகவே திரிஷாவை சுற்றி பல வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, விஜய் உடன் அவரை இணைத்து பல்வேறு கதைகள் உருவாக்கப்பட்டன. இருவரும் முன்பே சில படங்களில் இணைந்து நடித்ததாலும், அவர்களுக்கிடையேயான நட்பு குறித்து ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருந்ததாலும், இந்த வதந்திகள் வேகமாக பரவியது. இதை சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மேலும் பெரிதாக்கியதாகவும் கூறப்படுகிறது.
திரிஷாவின் திருமணம் சர்ச்சை
இதற்கிடையில், திரிஷா குறித்து முற்றிலும் அடிப்படையற்ற சில தகவல்கள் வைரலாகத் தொடங்கின. ஒரு தொழில் அதிபருடன் திருமணம் செய்து கொண்டு விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகிறார், அவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர், அந்த குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகியுள்ளது என்றெல்லாம் பரபரப்பான வதந்திகள் பரவி வந்தன. இந்த தகவல்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பரவியிருந்தாலும், சிலர் அதை உண்மையாகவே எடுத்துக்கொண்டு பகிர்ந்தது இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்தது.
திரிஷாவின் இன்ஸ்ட்டா பதிலடி
இந்த நிலையில், திரிஷா அமைதியாக இருப்பதை விட நேரடியாக பதிலடி கொடுக்க முடிவு செய்தார். தன்னை பற்றி பரவி வரும் இந்த வதந்திகளை மிகவும் நையாண்டி கலந்த முறையில் மறுத்தார். "எனக்கு கல்யாணமா? அது கூட ஒரு தொழில் அதிபருடன்? நான்கு குழந்தைகளா? அதில் இரண்டு வயசு குழந்தையா?" உங்க கற்பனை என்னும் இருக்கிறதா அல்லது தீர்ந்து விட்டதா என்றபடி, இந்த வதந்திகளின் அபத்தத்தையே வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அவரது இந்த பதில், வதந்திகளை நம்பியிருந்தவர்களுக்கு ஒரு நேரடி பதிலாக இருந்ததோடு, "எதையும் பார்த்தவுடன் நம்ப வேண்டாம்" என்ற செய்தியையும் கொடுத்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். சிலர், "இப்படி நேரடியாக ரியாக்ட் பண்ணது சரியான முடிவு" என்று பாராட்டினார்கள்.

திரிஷா வொர்க் அவுட் போஸ்ட்
இந்த சர்ச்சைகள் ஓரங்கட்டப்படுவதற்குள், திரிஷா தற்போது தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.
ஒரு தரப்பு, "நான் அடிச்சா தாங்க மாட்ட" என்பதுபோல் அவர் கடுமையாக ட்ரெயினிங் எடுத்து வருகிறார் என்று நகைச்சுவையாகக் கூறி அவரை வம்பு இழுத்து வருகின்றனர். ஆனால் இன்னொரு தரப்பு மிகவும் நேர்மையான கோணத்தில் இதை பார்க்கிறது. "40 வயதை கடந்த பிறகு உடல் ஆரோக்கியத்தை அதிகமாக கவனிக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் இவ்வளவு டெடிகேஷனுடன் ஜிம்முக்கு செல்கிறார்" என்று பாராட்டுகின்றனர்.
ரசிகர்கள் கருத்து
மேலும், சிலர் இதை ஒரு விழிப்புணர்வு கோணத்தில் எடுத்துக் கொண்டு, "திரிஷாக்கு மட்டும் லைக் பண்ணி விட்டு போகாமல், நீங்களும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள்" என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்னுமொரு சிலர் திரிஷா ஜோதிகாவை பாலோ பண்ணுகிறாரா அவரைப்போலவே ஒர்க் அவுட் வீடியோ வெளியிட ஆரம்பித்து விட்டாரே என்று கலாய்க்கின்றனர்.இது ஒரு வகையில் ஆரோக்கிய விழிப்புணர்வாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் பார்க்கும்போது, ஒரு பக்கம் அடிப்படையற்ற வதந்திகள், மறுபக்கம் அதற்கு நடிகை தந்த துல்லியமான பதில், இன்னொரு பக்கம் அவரது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முயற்சி - இவை அனைத்தும் சேர்ந்து திரிஷாவை மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக மாற்றியிருக்கிறது.
இந்நிலையில், "வதந்திகளுக்கு பதில் சொல்லியும், தனது வாழ்க்கையை தனது வழியில் முன்னெடுத்து செல்வதும் தான் சிறந்த பதில்" என்பதை திரிஷா மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு












Click it and Unblock the Notifications