லவ்வரை மிஸ் பண்ணுகிறேன்.. காதல் இல்லாத வாழ்க்கை! ஓபனாக திரிஷா போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே!
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் இன்னும் கூட ஹீரோயினாகவே டாப் லெவலில் இருக்கிறார் என்பதே அவருடைய ஸ்ட்ரெங்க்த். ஆனால், சினிமாவை விட அவர் பெயர் அடிக்கடி பேசப்படுவது இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகத்தான்.
சமீப காலமாக பார்த்தால், திரிஷா எதை செய்தாலும் அது நேராக டிரெண்ட் ஆகிறது. ஒரு நாள் கோயிலுக்கு தன்னுடைய வளர்ப்பு நாயை அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகிறது... இன்னொரு நாள் ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய் உடன் சேர்ந்து வந்த புகைப்படம் பேசப்படுகிறது... இப்படியே தொடர்ந்து அவர் சுற்றி சர்ச்சை சூழல் உருவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த பின்னணியில் தான் இப்போது ஒரு சின்ன இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரிய விவாதமாக மாறியுள்ளது.

திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி
திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த அந்த ஒரு வரி, "காதல் மட்டுமே எல்லாம் இல்லை... ஆனால் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது". அதேபோல காதலரே மிஸ் பண்ணுவது போலவும், காதலர் தொலைதூரத்தில் இருப்பதால் வருத்தத்தில் இருப்பது போலவும் சில போஸ்ட்களை தொடர்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த போஸ்டை பார்த்ததும் ரசிகர்கள்,"யாரை நினைச்சு இப்படி போட்டிருக்காங்க?", "இது யாருக்கான மெசேஜ்?"
சூடு பிடித்த சூழல்
இந்த பதிவு சாதாரண நேரத்தில் வந்திருந்தா இவ்வளவு பேசப்பட்டிருக்காது. ஆனால் இப்போ நிலைமை வேற மாதிரி இருக்கு. சமீபத்தில் விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள், அதில் வந்த 'ஒரு நடிகை' குறித்த பேச்சு... இதெல்லாம் இணையத்தில் ஏற்கனவே பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்திலேயே திரிஷா - விஜய் இணைந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படமும் வைரலானது.
இதனால் "அந்த நடிகை திரிஷாதானா?" என்ற சந்தேகம் சிலரிடம் உருவானது. அதிகாரப்பூர்வமாக எந்த உறுதியும் இல்லாத விஷயம் என்றாலும், சோசியல் மீடியா அதை பெரிய கதையாக மாற்றி விட்டது.
ரசிகர்கள் ரியாக்ஷன்
இப்போ இந்த காதல் பதிவு வந்ததும், கமெண்ட் பாக்ஸ்ல ரசிகர்களின் கலக்கமே வேற லெவலில் இருக்கிறது. "இதுல என்ன ஹிண்ட் இருக்கு?","இப்போ இந்த மாதிரி போஸ்ட் போடுற டைமா இது?", "தேர்தல் வரைக்கும் சும்மா இருங்க மேடம்!" என்று பலரும் நேராகவே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

கவலைப்படாத திரிஷா
ஆனா இந்த எல்லா விமர்சனங்களையும் பார்த்தும், திரிஷா எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார். அவர் வழக்கம் போலவே தனது வாழ்க்கையை, தனது ஸ்டைலில் தான் நடத்திக் கொண்டு வருகிறார். திரைப்பட பக்கம் பார்த்தால், தற்போது பெரிய படங்களிலேயே தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். வயது 40-ஐ கடந்தும் இப்படி டாப் ஹீரோயினாக இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம்.
மொத்தத்தில், ஒரு சின்ன இன்ஸ்டா வரி தான்... ஆனால் அதைச் சுற்றி உருவான சர்ச்சை மட்டும் பெரிய அளவுக்கு போயிருக்கிறது.
இது ஒரு சாதாரண எண்ணமா? இல்ல வேறு ஏதாவது மறைமுக அர்த்தமா? என்றெல்லாம் பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்கான பதில் திரிஷாவிடம்தான் இருக்கிறது... ஆனால் அவர் சொல்லும் வரை இந்த விவாதம் நிற்கப் போவது போல தெரியவில்லை.












Click it and Unblock the Notifications