Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்ப சந்தோஷமா திவ்யா..ஆவேசமாக கேட்ட செல்லம்மா சீரியல் அர்ணவ்.. புழல் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் எந்த தவறும் செய்யவில்லை என்று டிவி சீரியல் நடிகர் அர்ணவ் கூறியுள்ளார். தன்னை மதமாற்றி திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட நடிகர் அர்ணவ் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செவ்வந்தி டிவி சீரியல் நடிகை திவ்யா இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பல்லக்கு என்னும் கன்னட சினிமாவில் தனது மீடியா பயணத்தை தொடங்கி இருந்தாலும், இவருக்கு கன்னட சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெயர் கிடைத்தது.

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதே சீரியலில் அர்ணவ் உடன் இணைந்து நடித்தார் திவ்யா.

திவ்யா குடும்ப வாழ்க்கை

திவ்யா குடும்ப வாழ்க்கை

திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

அர்ணவ் கொடுமை

அர்ணவ் கொடுமை

இந்த நிலையில் அர்ணவ் திவ்யா காதல் ஜோடி திடீரென திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுடைய திருமணத்தை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்துள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் புயல்

குடும்ப வாழ்க்கையில் புயல்

இருவரும் காதலிக்கவே ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் அர்ணவ் உடன் திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்களை பதிவிட்டார் திவ்யா. இதன் பின்னர்தான் இவருடைய வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அர்ணவ் மீது புகார்

அர்ணவ் மீது புகார்

கர்ப்பிணியான தன்னை அர்ணவ் தாக்கியதாகவும் இதனால் கரு கலையும் சூழ்நிலையில் இருப்பதாகவும் திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மகளிர் ஆணையத்தில் புகார்

மகளிர் ஆணையத்தில் புகார்

இதனிடையே லவ் ஜிகாத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக நடிகை திவ்யா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் அர்ணவ் தன்னை மிரட்டுவதாக ஆடியோ ஒன்றை நடிகை திவ்யா வெளியிட்டுள்ளார். அதில் தான் தமிழன் என்றும், தமிழ் நாட்டிலேயே வந்து உனது வேலையை காண்பிக்கிறாயா என அர்ணவ் பேசியுள்ளார். இது என் ஊர் கர்நாடகாவில் இருந்து இங்கே நீ இப்படி செய்தால் நான் என்ன செய்கிறேன் பார் என்று பேசிய ஆடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

பொய் சொன்ன அர்ணவ்

பொய் சொன்ன அர்ணவ்

நடிகர் அர்ணவ் விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். விசாரணைக்கு வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு அர்ணவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்ணவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை காவல்துறையினர் ஏற்கவில்லை. விசாரணையில் அவர் பொய் சொல்வதாகவும் படப்பிடிப்பில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

அர்ணவ் கைது

அர்ணவ் கைது

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம், நேமம் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்த நடிகர் அர்ணவை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

திவ்யா சந்தோஷமா

திவ்யா சந்தோஷமா

செய்தியாளர்களிடம் பேசிய அர்ணவ், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் மீது திவ்யா புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். நான் சிறைக்குப் போகிறேன்..திவ்யா இப்ப சந்தோஷமா என்றும் ஆக்ரோஷமாக பேசினார். இதையடுத்து நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+