Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிபொலி...ஆட்டம் போட்டு ஆடவைக்கும் ரோஜா.. பார்த்ததும் ஓடோடி வரும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் கலக்கி கொண்டிருக்கும் ரோஜா சீரியல் பிரியங்கா நல்கரியை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போய் விட்டார்களாம்.
புடவையில் குத்தாட்டம் போட்டிருக்கும் இவரைப் பார்த்து பல பேரோட மனதும் குதூகலித்து வருகிறதாம்.

என்ன மாதிரி பார்த்தாலும் இவர் மட்டும் இப்படி அழகாக இருக்கிறாரே என்று இவருடைய ரசிகர்களுக்கு நெடு நாளாக சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறதாம்.

ரோஜானாலே வாசம் தான்

ரோஜானாலே வாசம் தான்

சன் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ரோஜா சீரியல் ரோஜா என்று சொன்னாலே அனைவரும் மனதிலும் டக் என்று நினைவுக்கு வந்துவிடும் பிரியங்கா நல்கரியை சமூக வலைதளத்திலும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது. இவருடைய ஒவ்வொரு போஸ்டரும்

பெரும் வைரலாக பரவி விடும் அந்த மாதிரிதான் தற்போது கூட இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட வீடியோ செம வைரலாக பரவி வருகிறது. புடவையில் பார்த்தாலும் மாடர்ன் உடையில் பார்த்தாலும் இவருக்கு நிகர் இவர் மட்டும்தான் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் தமிழ் தெரியாது

ஆரம்பத்தில் தமிழ் தெரியாது

பிரியங்கா நல்கரி என்று சொன்னதும் ஒரு சிலருக்கு அது யார் என்று தான் கேட்கின்றனர். அந்த அளவிற்கு இவர் ரோஜாவாகவே அனைவருடைய மனதிலும் மணம் வீசிக் கொண்டிருக்கிறார். சன்டிவி ரோஜா என்று சொன்னால் டக்கென்று அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடும் அளவிருக்கு பெரும் பாப்புலராகி விட்டார். ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது இந்த சீரியல் நமக்கு செட்டாகுமா என்று ரொம்பவே யோசித்து இருக்கிறாராம். தான் நடிக்கவில்லை என்று கூட கூறியிருக்கிறார். ஏனென்றால் இவருக்கு ஆரம்பத்தில் தமிழ் தெரியாதாம், தமிழ் தெரியாமல் எப்படி இந்த சீரியலில் நடிக்க முடியும் என்றுதான் இவர் நினைத்திருக்கிறார்.

புசுபசு அழகு

புசுபசு அழகு

நடிகைகள் என்றாலே அல்லது அழகு என்றாலும் சரி ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று நினைத்துக்கொண்டிருந்த மாயையை இவர் உடைத்து எறிந்து விட்டார். இவரை பார்த்த ரசிகர்கள் பலர் ரோஜா மாதிரி புசுபுசுன்னு இருந்தாலே அழகுதான் என்று இவரை பார்த்து வர்ணித்து வருகின்றனர். பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் அந்த சீரியலுக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் இந்த ரோஜா சீரியலுக்கு மட்டும் ஆண்களும் ரசிகர்களாக மாறிவிட்டனர். அதற்குக் காரணம் ஒன்று இந்த சீரியலில் வெளியே சென்றிருக்கும் ஆண்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டில் தினமும் ஒளிபரப்பிக் கொண்டு இருப்பது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் இந்த சீரியலின் நடிகையும் தான். அதுவும் தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் அனைவரும் இதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

அன்பு மழை அதிகமாத்தான் இருக்கு

அன்பு மழை அதிகமாத்தான் இருக்கு

இந்த சீரியலில் மட்டும் பிஸியாக இல்லாமல் மாடலிங்கிலும் போட்டோசூட்டிலும் பிஸியாக இருக்கிறார். என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் ஒரு சில நிமிடங்களில் கூட ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து குவித்து விடுகிறார். எப்பவும் கேமரா முன்னாடி இருப்பது தான் இவருக்கு பிடிக்கும் போல அதுவும் தற்போது பச்சை கலர் புடவையில் அலுங்கி குலுங்கி அசத்தல் ஆட்டம் போட்டு அழகான வீடியோவை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டு இருக்கிறார். இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வழக்கம் போல கமெண்டுகளை ஜெட் வேகத்தில் அனுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+