பாக்யலட்சுமி: பிரச்சனையில் சிக்கிய பாக்யா.. அம்மாவுக்காக சுதாகர் குடும்பத்திற்கு இனியா அனுப்பிய நோட்டீஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 16ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா நிதிஷுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். அதனால் பதறிப்போன சுதாகர் இனியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறார். ஆனால் இனியா சுதாகர் குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா, செல்வி, ஆகாஷ் மூன்று பேரும் ஹோட்டலை மூடி விட்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யாவிடம் செல்வி அக்கா இந்த ஆர்டரை எடுத்துக்கலாம் என்று சொல்கிறார். அதாவது சுதாகர் பாக்யாவை பழிவாங்குவதற்காக ஒரு ஆளை அனுப்பி பாக்கியாவை ஏமாற்ற சொல்லி இருந்தார். அந்த ஆர்டரை பற்றி தெரியாமல் செல்வி பாக்யாவிடம் ஆர்டரை முடித்துக் கொடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பாக்கியா எனக்கு குழப்பமா இருக்கு என்று சொல்லிக்கொண்டு வரும்போது நம்மகிட்ட வேலை பார்த்தவங்க எல்லாரும் இப்ப வேலை இல்லாம தான் இருக்கிறாங்க, அவங்களுக்கும் வேலை கொடுக்க மாதிரி இருக்கும் என்று தொடர்ந்து செல்வி சொல்லிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பாக்யா சரி என்று சொல்கிறார். பிறகு பாக்யா வீட்டிற்கு வரும் நேரத்தில் செழியன், எழில், இனியா மூன்று பேரும் சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். என்ன நீங்க சமைக்கிறீங்க அதான் நான் சமைப்பேனே என்று பாக்கியா கேட்க, எனக்கு ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு அதனால எங்க அண்ணனுக்கு கூட சேர்ந்து நானும் சமைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று இனியா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் கோபி வந்து எனக்கும் சாப்பாடு கிடைக்குமா? என்று கேட்க, கண்டிப்பா கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு சந்தோஷமாக இனியா சமைத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்கும் போது கோபி என்ன விஷயம் என்று விசாரிக்கிறார். அதற்கு வேலை பற்றி தான் யோசிச்சிட்டு இருக்கிறேன் என்று பாக்கிய சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது இன்னைக்கு இனியா ரொம்பவும் சந்தோஷமாக இருந்தா. அதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியா இருந்தது என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் சுதாகர் வீட்டில் சுதாகரும் அவருடைய மனைவி சந்திக்கவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிதீஷ் வீட்டை விட்டு வெளியே போறது கிடையாது, ஆனா சொந்தக்காரங்க எல்லாரும் இனியா பத்தி தான் கேட்கிறாங்க, அந்த பொண்ணு எப்ப வீட்டுக்கு வர போறான்னு கேக்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நிதிஷ் வெளியே கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அதை பார்த்தது சுதாகர் எங்க போற ஏற்கனவே உன் கூட அரெஸ்ட் ஆனாவங்கள பார்க்க போறியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தபால் வருகிறது. அதை பிரிச்சு பார்க்க, இனிய டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதை பார்த்ததும் சந்திரிகா கோவப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். நம்மகிட்ட இருக்கிற பணத்தை பிடுங்குவதற்காக தான் இவங்க இப்படி நாடகம் போடுறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க இதற்கு ஒரு வழி பண்ணலாம் என்று சுதாகரும் அவருடைய மனைவியும் இனியா வேலை பார்க்கும் ஆஃபீஸுக்கு போகின்றனர்.
மறுபக்கத்தில் பாக்கியம் தன்னை ஏமாற்ற பிளான் போட்டு இருக்கும் நபருக்கு போன் செய்து சமையல் செய்து தருவதாக சொல்லிவிடுகிறார் அட்வான்ஸ் பணம் பாதியை தர வேண்டும் என்று சொன்னதும் அந்த நபர் சரி என்று வெளியாகமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் சுதாகரும் அவருடைய மனைவியும் இனியாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல, முதலில் யோசிக்கும் இனியா பிறகு என்னவென்று கேட்கிறார்.
அப்போது இனி இதுபோல பிரச்சனை நடக்காது நீ இப்ப சம்மதம் சொன்னாலும் எங்க வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறோம் என்று சுதாகர் சொல்ல, என்னால் இனி ஒரு ட்ரக் அடிட் கூட வாழ முடியாது என்று இனியா சொல்லிவிடுகிறார். சரி அப்போ மியூச்சுவலா டைவர்ஸ் பண்ணிக்கலாம் என்று சொல்ல அது முடியாது, என் கல்யாணத்துக்காக எங்க அம்மாகிட்ட இருந்து வாங்குன ரெண்டு ரெஸ்டாரண்டையும் எனக்கு திருப்பி தரணும் என்று இனியா சொல்ல சுதாகரும் அவருடைய மனைவி அதிர்ச்சியாகின்றனர். இதற்கு மேல் எல்லாவற்றையும் லீகலா பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு இனியா கிளம்பி போய்விடுகிறார். இதனால் சுதாகர் அதிர்ச்சியில் இருக்கிறார்.இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications