பாக்கியலட்சுமி: இனியாவிற்கு நிதிஷ் கொடுத்த அதிர்ச்சி.. பாக்யா ஆட்டம் ஆரம்பம்.. துணைக்கு வரும் கோபி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 24 ஆம் தேதிக்கான எபிசோடில் நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற உண்மை இனியாவிற்கு தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் இனியா நிதிஷிடம் கேட்ட கேள்விக்கு அவர் எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஆஃபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் வேலை பார்ப்பவர்கள் வந்து இன்னும் வேலையை முடிக்கலையா? என்று கேட்க, எனக்கு ஒரு ப்ராஜெக்ட் தொடங்கி இருக்கிறேன் ஆனால் அதை எப்படி கொண்டு போறதுன்னு தெரியலை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இனியா உடன் வேலை பார்ப்பவர்கள் சில வருடங்களுக்கு முன்பு நிதிஷ் போதை பொருள் வழக்கில் சிக்கியது பற்றியும், சுதாகர் தலையிட்டு தன்னுடைய மகனை அதிலிருந்து தப்பவைத்தது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Baakiyalakshmi Serial vijay TV

சுதாகர் என்றால் யார் என்று தெரியாதது போல இனியா கேட்க, சுதாகருடைய போட்டோவை அவர்கள் காட்டுகிறார்கள் அதை பார்த்ததும் இனியாக்கு எல்லா உண்மைகளும் தெரிய வருகிறது. அதனால் அதிர்ச்சியாகி வீட்டிற்கு வருகிறார். வீட்டில் பிறந்த நாள் ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. இனியாவை பார்த்ததும் சுதாகர் பிறந்தநாள் பொண்ணு இவ்வளவு லேட்டா வரலாமா சீக்கிரமா போய் கிளம்பி வாமா என்று சொல்கிறார். அதோடு அங்கிருந்து உறவினர்களை சுதாகரின் மனைவி அறிமுகம் செய்கிறார்.

இந்த நேரத்தில் நாம இந்த உண்மையை பற்றி பேசி சீன் கிரியேட் பண்ண வேண்டாம் என்று இனியா யோசித்து விட்டு மாடிக்கு போகிறார். அப்போது மாடியில் இருந்து நிதிஷ் இறங்குகிறார். அவரிடம் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் இதுவரைக்கும் நீங்க என்கிட்ட எதையாவது மறைச்சு இருக்கீங்களா? என்று இனியா கேட்ட, நான் எந்த விஷயத்தையும் மறைக்கவில்லை. நீ தான் என்கிட்ட மறைச்சிருக்கிற. உன்னுடைய முன்னாள் காதலன் பற்றியும் சொல்லல, நீ இப்போ அவன்கிட்ட பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கிறது பற்றியும் சொல்லவில்லை என்று இனி மீது பழியை போட, அதற்கு இனியா நான் ஆகாஷ் பற்றி ஏற்கனவே தெளிவுபடுத்திட்டேன். அதற்கு பிறகும் நீங்க நம்பலனா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது, ஆனால் நீங்க எதுவும் என்கிட்ட மறைச்சு இருக்கீங்களா? என்று மீண்டும் கேட்க நான் எதுவும் மறக்கல என்று திமிராக பேசுகிறார்.

அப்போது இனியா உண்மையை கேட்க வருகிறார். ஆனாலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம வீட்டில் இருந்து எல்லோரும் வந்துடுவாங்க இப்போ பேசி பிரச்சனை செய்ய வேண்டாம் என்று அமைதியாக மாடிக்கு சென்று விடுகிறார். பிறகு பிறந்தநாள் பங்க்ஷனுக்கு கிளம்பி கீழே வரும் நேரத்தில் எழில் வந்திருக்கிறார். செழியனை பார்த்ததும் இனியா கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார்.

இதில் செழியன் என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு சந்திரிகா உங்களை திடீர்னு பார்த்ததினால் அவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்துட்டதுனு நினைக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது எழில் உன்னுடைய எல்லா பிறந்தநாளுக்கும் நான் கூட இருந்திருக்கிறேன், இந்த பிறந்தநாளுக்கு நான் இல்லாமல் இருப்பேனா? அதனால்தான் வந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு எழில் வெளியே வர அப்போது செழியன், பாக்கியா, கோபி, ஈஸ்வரி என எல்லோரும் இனியா வீட்டிற்கு வருகின்றனர்.

வாசலில் எழில் நிற்பதை பார்த்ததும் எல்லோரும் இன்ப அதிர்ச்சியாகின்றனர். நீ மட்டும் தான் வந்திருக்கிறாயா? அமிர்தா வரலையா? நீ திரும்பி போற வரைக்கும் அமிர்தா குழந்தையை தனியா பாத்துக்குவாளா? என்று ஈஸ்வரி கேள்விகளை அடுக்கி கொண்டே போக அதற்கு எழில் நான் நாள் கணக்கா இங்க தங்க போறது இல்ல, மணி கணக்கு தான் தங்க போறேன். இந்த பிளைட்டில் வந்துவிட்டு அதே பிளைட்டில் திரும்பி போயிடுவேன் என்று சொல்ல, கோபி நீ போனில் விஷ் பண்ணி இருக்கலாமே? இதுக்காகவா நேரில் வந்த என்று சொல்ல, என்னுடைய தங்கச்சிக்காக நான் இதைக்கூட செய்ய மாட்டேன்னா? என்று எழில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து பாக்கியா சந்தோசப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான பிரமோவில் நிதிஷ் பற்றி கோபியிடம் இனியா சொல்கிறார். இனி பாக்யாவிற்கு உண்மை தெரிய வரும்போது தான் சம்பவமே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+