அசீமை வைத்து சேனல் செய்த தில்லாலங்கடி வேலை.. இதை கவனிச்சீங்களா? இப்படி இறங்கிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது அசீமிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருப்பதால் அவருடைய கிளிப்ஸ் அந்த ப்ரோமோவில் இடம் பிடித்திருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் விஜய் டிவி மற்றொரு நிகழ்ச்சியின் ப்ரோமோவில் அசீமின் புகைப்படத்தை பயன்படுத்தி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
சன் டிவி, விஜய் டிவி என பல சீரியல்களில் கதாநாயகனாக நடித்து வந்த அசீம் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் ஆரம்பம் முதலே அதிகமாக சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒருத்தரப்பு ரசிகர்கள் இவரை கலாய்த்து கொண்டு இருந்தாலும், இவருக்கு சப்போர்ட் கொடுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

சக நடிகர்களின் குற்றச்சாட்டு
ஒரு பக்கம் அசீமுக்கு எதிராக அவருடன் சீரியல்களில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் பலர் டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்து அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது போல தான் வெளியேயும் இருப்பார் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டார். பெண்களை தன்னுடைய அடிமை என்பது போலத்தான் நடத்துவார். தன்னை யாரும் நீ, நா என்று கூறக்கூடாது என்று கதையை கூட மாற்ற சொல்லுவார். என்றெல்லாம் அவரை குறித்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஆனால் அவருக்கு சப்போர்ட் கொடுக்கும் ரசிகர்கள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

அதை கண்டுக்கிறதே கிடையாது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கமல் முன்னிலையில் அசீம் திட்டு வாங்கி கொண்டு இருந்தாலும் அதை அவர் பெரியதாக எடுத்துக் கொள்வதே கிடையாது. என்னதான் கமல் அசீமுக்கு வார்னிங் கொடுத்தாலும் அடுத்த நாள் காலையில் தன்னுடைய வழக்கமான வேலைகளை தொடங்கி விடுகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஒரு சில போட்டியாளர்கள் கூட அசீம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் கடைசியாக வெளியேறிய தனலட்சுமி அசீமுக்கு ஆதரவாக பேசியது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வேறு ப்ரோமோவையும் விடலையே
இந்த நிலையில் அசீமுக்கு ஆதரவாக பிக் பாஸ் இந்த விஜய் டிவி நிகழ்ச்சியும் செயல்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். காரணம் நேற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் சண்டையிடும் காட்சிகள் முதலில் ஆரம்பித்து பிறகு இங்கே அசீம் இல்லை இது வேற நிகழ்ச்சி என்கிற போக்கில் பேசுகின்றனர். இதை பார்த்து வேற நிகழ்ச்சிக்கு கூட அசீம் உடைய முகம் தான் உங்களுக்கு தேவைப்படுகிறதா? அசீமை வைத்து தான் விஜய் டிவி கல்லா கட்டுகிறதா? அப்போ அசீம் தான் இந்த சீசன் டைட்டில் வின்னரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications