பிக் பாஸில் விஜய் டிவி சீரியல் நடிகை.. அதை மட்டும் செய்ய மாட்டேன்..!! அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகி நேஹா கவுடா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கன்னட பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் தான் புது அனுபவத்தை பெற போவதாக மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

சன் டிவியில் அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் மூலமாக பலருக்கும் பரீட்சையமான நேஹா கவுடா அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு instagram மூலமாக இவர் தகவல் தெரிவித்து இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக தான் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்று பலரும் கூறி இருந்தனர். அதற்குப் பிறகு இவருக்கு பதிலாக இதே சீரியலில் கன்னிகா நடித்து வந்தார்.

பிக் பாஸில் அறிமுகம்
திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சில ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியல் முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் அடுத்து இவர் என்ன செய்யப் போகிறாரோ? ? என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறி இருந்தார். தற்போது தமிழ் பிக் பாஸ் ஒளிபரப்பாக போவதால் பலரும் அவர் தமிழில் தான் களமிறங்க போகிறார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவர் கன்னடா பிக் பாஸ் ஒன்பதாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நேஹாவின் பதில்
நேஹா கவுடா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு தான் உள்ளே சென்றுள்ளார். உள்ளே யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன், என்னுடைய வேலையை நான் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறேன்.
நான் எப்போதுமே அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. அதுபோல இங்கே கேட்டு அங்கேயும், அங்கே கேட்டு இங்கேயும பேசும் பழக்கம் எனக்கு கிடையாது. பல அழகான நினைவுகளை பிக் பாஸ் வீட்டினுள் சேகரித்துக் கொள்ளப் போகிறேன். நெகட்டிவ் ஆகவோ அனாவசியமாகவோ யாரிடமும் பேச மாட்டேன் என்று கூறிக் கொண்டுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய எபிசோடுகள் ஒளிபரப்பாக தொடங்கி விட்டது. இந்த நிலையில் இவர் எந்த மாதிரி இந்த வீட்டிற்குள் இருக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது போகப் போக தெரியும். சீரியலில் இவரை அமைதியாக பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இவருடைய கேரக்டரை பார்க்க முடியும் என்றெல்லாம் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications