விஜய் டிவியின் “குசும்பு”.. அடிவாங்கும் அர்னவ்! இது சீரியல் புரோமோவா.. இல்ல உண்மையா? செம “டைமிங்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்பதிகளான சீரியல் நடிகர்கள் அர்னவ் - திவ்யா இடையே மோதல் வெடித்துள்ளது ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அர்னவ் நடித்துள்ள விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் புரோமோவில் அவரது நிஜ வாழ்க்கை பிரச்சனையுடன் ஒத்துப்போவதைபோல் காட்சிகளை வைத்துள்ளார்கள்.

பிரபல தொலைக்காட்சி சீரியனான கேளடி கண்மணியில் நடித்து வந்தவர் திவ்யா. ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டு கணவரை விட்டு பிரிந்த இவருக்கு அவரோடு நடித்து வந்த அர்னவுக்கும் காதல் ஏற்பட்டது.

5 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்திருக்கின்றனர். அர்னாவ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த நிலையில், திருமணத்துக்கு பிறகு திவ்யாவுக்கு அர்னவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்னவ் துன்புறுத்துவதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். திருமணத்துக்கு முன் ஒற்றுமையாக இருந்த தங்களுக்குள் அதன் பின்னர் அடிக்கடை சச்சரவுகள் ஏற்பட்டதாக கூறி இருந்தார்.

தாக்கியதாக புகார்

தாக்கியதாக புகார்

மேலும் மற்றொரு நடிகையுடன் அர்னவுக்கு தவறான தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது தனக்கு தெரிந்ததால் அர்னவ் தன்னை தாக்கி துன்புறுத்துவதாகவும், மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தாக்கப்பட்டதாகவும் திவ்யா தெரிவித்தார். திவ்யா இந்த குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அர்னவ் விளக்கம்

அர்னவ் விளக்கம்

திவ்யாவின் குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் அர்னவ் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து உள்ளார். அதில், திவ்யாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்த அர்னவ், அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் உள்ளதாகவும், விவாகரத்து செய்யாமலேயே தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதை அவர் மறைத்துவிட்டார் என்றும் அர்னவ் குற்றம்சாட்டினார். திவ்யாவும் மற்ற நடிகர்களோடு நெருங்கி பழகினாலும் தான் அவரை பற்றி தவறாக நினைத்ததே இல்லை என்று அர்னவ் விளக்கினார்.

செல்லம்மா புரோமோ

செல்லம்மா புரோமோ

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அர்னவ் நடித்த செல்லாம்மா சீரியல் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. அர்னவ் படத்தை முகப்பாக வைத்து யூடியூபில் விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோவில், அவரை அனைவரும் கும்பலாக சேர்ந்து தாக்குவதை போன்ற காட்சியும் இறுதியில், "சித்தார்த் (அர்னவ்) தன்னை நிரபராதி என்று எப்படி நிரூபிக்கப்போகிறார்?" என்ற நிறைவு வசனம் வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அர்னவின் நிஜ வாழ்க்கையுடன் இந்த புரோமோ ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+