அவமானப்படுத்திய டி ராஜேந்தர்.. கண்ணீர் விட்ட தன்ஷிகா, துணிச்சலாக விஷால் போட்ட பதிவு.. உடைந்த காதல் ரகசியம்
சென்னை: நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை, தன்ஷிகா நடித்து உருவான யோகிடா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தன்ஷிகா மற்றும் விஷால் இருவரையும் சேர்த்து எந்த கிசுகிசுப்பும் வெளியே பரவவில்லை என்றாலும் தன்ஷிகாவிற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு டி ராஜேந்ரனை விஷால் எதிர்த்த கதை பலருக்கும் மறந்திருக்கலாம். அது பற்றி பார்க்கலாம்.
நடிகர் விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலிக்கும் விஷயத்தை நேற்று மாலை அவர்கள் அறிவிப்பதற்கு முன்பு இணையத்தில் இந்த தகவல் வெளியாகிவிட்டது. அதே நேரத்தில் இவர்களுடைய காதல் உருவான கதை பற்றிய சுவாரசியமான சம்பவங்களும் வெளியாகி இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் கிருஷ்ணா, நடிகர் விதார்த் முக்கிய கேரக்டரில் நடித்த விழித்திரு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நடிகை தன்ஷிகாவும் கலந்து கொண்டார்.

தன்ஷிகா டிஆர் ராஜேந்திரன் பிரச்சனை
அந்த நேரத்தில் தன்ஷிகா மேடையில் பேசும்போது அங்கிருந்த எல்லோருக்கும் நன்றி கூறினார். ஆனால் டி ராஜேந்தர் பெயரை சொல்வதற்கு அவர் மறந்துவிட்டார். இதனால் டி ராஜேந்தர் கோபத்தில் இருந்திருக்கிறார். அவர் பேசும் நேரம் வரும்போது இது பற்றி சற்று காட்டமாகவே பேசி இருந்தார். தன்ஷிகா இப்போது பெரிய படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதனால் எங்களையெல்லாம் மறந்துவிட்டார் என்னதான் புகழ் உச்சத்துக்கு போனாலும் எல்லாரையும் மறக்கக்கூடாது என்று பேசி இருந்தார்.
தன்ஷிகா அழுகை
தன்ஷிகா அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக காலா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனால் டி ராஜேந்தர் சற்று கடுமையாகவே தன்ஷிகாவை ஓபன் ஆக மேடையில் விமர்சித்து இருந்தார். அப்போது தன்ஷிகா நான் வேணும்னு பண்ணல சார் ஏதோ மறந்துட்டேன். திடீரென்று பேச சொன்ன பதட்டத்தில் பெயர் விட்டு விட்டது என்று விளக்கம் கொடுத்திருந்தார். ஆனாலும் டி ராஜேந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கடுமையாக பேசிக் கொண்டிருக்கும்போது அங்கிருந்தவர்களும் கைதட்டி இருந்தனர்.

விஷால் பதிவு
தன்னை சுற்றி நடக்கும் செயல்களை எதிர்பார்க்காத தன்ஷிகா அந்த இடத்தில் கண்ணீர் விட்டு விட்டார். பிறகு அதை மறைப்பதற்காக முயற்சிகளும் செய்து இருந்தார். அந்த நேரத்தில் அங்கிருந்த யாருமே தன்ஷிகாவிற்கு ஆதரவாக பேசவில்லை. அதுபோல எந்த நடிகர்களும் தன்ஷிகாவிற்கு சப்போர்ட் செய்து பேசவில்லை. ஆனால் இந்த வீடியோ twitter-யில் ட்ரெண்டானதை தொடர்ந்து சில ரசிகர்களும் தன்ஷிகாவிற்கு சப்போர்ட் செய்து வந்தனர்.
கண்டனம்
அப்போது நடிகர் விஷால் ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருந்தார். விஷால் வெளியிட்ட பதிவில், தன்ஷிகா டி. ராஜேந்தர் பெயரை விடுபட்டதற்காக மன்னிப்பு கேட்ட பிறகும் டி. ராஜேந்தர் தொடர்ந்து மேடையில் செல்வி தன்ஷிகாவை குறி வைத்து குற்றம் சாட்டினார் என்பது இப்போதுதான் தெரிந்தது. இயக்குனர் டி ஆர் பல திறமையான மூத்த நபர். மேடையில் இருப்பவர் ஒரு கூட்டத்தில் பேசும்போது பெயர்களை குறிப்பிட தவறுவது மிகவும் பொதுவானது.
விஷால் அதிருப்தி
கடந்த காலத்தில் மேடையில் அமர்ந்திருந்தவர்களில் சிலரின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்லவே நானும் மறந்து விட்டேன். தன்ஷிகா தனது பெயரை குறிப்பிட தவறியதை சுட்டிக்காட்டிய பிறகு தன்ஷிகா டிஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். டி ஆர் தனது மகளை போன்ற வயதுடைய தன்ஷிகாவை மன்னிக்கவில்லை. சினிமா துறையில் பெண்கள் முன்னேறுவது மிகவும் கடினம்.
தன்ஷிகாவிற்கு சப்போர்ட் செய்த விஷால்
தன்ஷிகாவை எனக்கு நன்றாக தெரியும் அவள் வேண்டுமென்று இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டார் என்று தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். தன்ஷிகா மன்னிப்பு கேட்டாலும் டி ஆர் தவிர்த்திருக்கலாம் என்ற போதிலும் தன்ஷிகாவை தொடர்ந்து குறி வைத்ததற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று அந்த பதிவு வெளியிட்டிருந்தார். இது கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.
விஷால் காதல் கதை
அதற்கு பிறகு தான் தன்ஷிகா மற்றும் விஷால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நேற்று நிகழ்ச்சியில் கூட தன்ஷிகா இதை மறைமுகமாக கூறியிருந்தார். எனக்கு சில பிரச்சனைகள் நடக்கும் போது எந்த நடிகரும் செய்யாத செயலை விஷால் எனக்காக செய்தார். விஷால் வீடு வரைக்கும் வந்து உதவியது எனக்கு அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியது, 15 வருடங்களாக எங்களுக்குள் பழக்கம் இருந்தாலும் கடந்த ஒரு வருடங்களாக எங்களுக்குள் காதல் ஏற்பட்டு இருக்கிறது என்று தன்ஷிகா வெளிப்படையாக பேசியிருந்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications